தமிழக அரசை தட்டிக் கேட்பேன்: வாசன்
டெல்லி:
மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ள தமிழக அரசு உள்ளிட்ட மாநில அரசுகளை தட்டிக் கேட்பேன் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவரான வாசன் கடந்த 29ம் தேதி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து இன்று தனது அலுவலகத்திற்குச் சென்று அமைச்சர் பொறுப்பை முறைப்படி ஏற்றார்.இப்பொறுப்பில் இதுவரை இருந்து வந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ், வாசனை வரவேற்று அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைத்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின்னர் வாசனுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்து ஆளுயர மாலை அணிவித்தனர். பின்னர் முதல் கோப்பில் கையெழுத்திட்டார் வாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசின் திட்டங்கள் முறைப்படி அமல்படுத்தப்படுவதை தீவிரமாக கண்காணிக்கவுள்ளேன். சேது சமுத்திரம் உள்ளிட்ட பல திட்டங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி நிறைவேற்றப்படும்.
மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் முறைப்படி நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு உள்ளிட்ட சில அரசுகள் இதை சரிவர செய்வதில்லை. அதுபோன்ற மாநில அரசுகளை நான் தட்டிக் கேட்பேன், விளக்கம் கேட்பேன்.
தமிழக நலனை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் விரைவுபடுத்தப்படும். தமிழக நலனுக்காக எனது அமைச்சர் பதவியை முழுமையாக பயன்படுத்திக் கொள்வேன் என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications