ஊழியர்கள் ஸ்டிரைக்-நாறும் விமான நிலையங்கள்
சென்னை:
விமான நிலைய ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழக விமானநிலையங்கள் குப்பைக் களமாக மாறி பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளன.
மும்பை, டெல்லி விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து இந்தியா முழுவதும் 136 விமான நிலையங்களின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.இந்த வேலை நிறுத்தம் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றாலும் கூட சரக்குகள் கையாளுதல், விமான நிலைய பராமரிப்பு ஆகிய முக்கியப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
துப்புறவுத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான நிலையங்கள் சுத்தப்படுத்தப்படாமல் குப்பை நிறைந்து கிடக்கின்றன. கழிவறைகளும் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கிடக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் விட்டுச் செல்லும் பொருட்கள் பெரும் குவியலாக காணப்படுகிறது. இதனால் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற சென்னை விமான நிலையம் நாறிக் கிடக்கிறது.
இதே நிலைதான் கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களிலும் காணப்படுகிறது. விமான நிலையங்கள் அசுத்தமாகக் காணப்படுவதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதேபோல விமானங்கள் மூலம் வரும் சரக்குகளும் பெருமளவில் குவிந்து கிடப்பதால் சென்னை விமான நிலையத்தில் சரக்குப் போக்குவரத்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications