முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடகத்தின் 18வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் பாஜகவை சேர்ந்த எதியூரப்பா துணை முதல்வராகபதவியேற்றார். இருவருக்கும் கர்நாடக ஆளுநர் சதுர்வேதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விதான சவுதா முன்பு இன்று பிற்பகல் 12.40 மணிக்கு நடைபெற்ற விழாவில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும் கலந்து கொண்டார்.

முன்னதாக குமாரசாமி கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம்மறுத்துவிட்டது.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை தலைவராக எம்.பி.பிரகாஷ் இருந்த நிலையில் குமாரசாமியை அக்கட்சியின்தலைவராக சபாநாயகர் கிருஷ்ணா அறிவித்ததை எதிர்த்து எம்எல்ஏக்கள் வாட்டாள் நாகராஜ்(கன்னட சலுவளி வாட்டாள் கட்சி),ஸ்ரீராமரெட்டி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ராஜேந்திரன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அதில் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி அஜீத் குஞ்சால், குமாரசாமி உள்பட 36 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை சிரியாக் ஜோசப், ஆர்.குருராஜன் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன்பெஞ்சுக்கு விசாரணைக்கு அனுப்பினார்.

இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சிரியாக் ஜோசப், குமாரசாமி உள்பட36 எம்எல்ஏக்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் சபாநாயகருக்கு கொடுத்த மனு மீது அவர் இன்னும்தனது தீர்ப்பை வழங்கவில்லை.

சபாநாயகர் இன்னும் தீர்ப்பு வழங்காத சூழ்நிலையில் குமாரசாமி உள்பட அவரது அமைச்சரவை பதவி ஏற்பதற்கு இடைக்காலதடை விதிப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் ஆட்சி அதிகாரத்தில் சட்டம் குறுக்கிடுவதை நாங்கள் விரும்பவில்லை.

முதலமைச்சராக பதவி ஏற்பவர்கள் அதற்கு தகுதியானவர்கள் தானா? என்பதை ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றுதீர்ப்பளித்தார்.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து குமாரசாமிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு விதான சவுதா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.

குமாரசாமி பதவி ஏற்பு விழாவை அவரது தந்தை தேவே கெளடா புறக்கணித்து விட்டார்.

இன்று டெல்லி செல்லும் தேவே கெளடா மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டி பல்வேறுபிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+