வட சென்னையில் பரவும் மலேரியா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரின் வட பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளில் மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது.

சென்னை மாநகரின் தூய்மையற்ற பகுதியாக வட சென்னை விளங்குகிறது. இங்கு மக்கள் அடர்த்தி அதிகம் என்பதும் இதற்கு ஒருகாரணம். இதன் காரணமாக சென்னை நகரில் எந்தத் தொற்று நோய் ஏற்பட்டாலும் அது வேகமாகப் பரவுவது வட சென்னையில்தான். இதைக் கருத்தில் கொண்டே வட சென்னையில் அமைந்துள்ள தண்டையார்பேட்டை பகுதியில் அரசு தொற்று நோய் தடுப்புமருத்துவமனை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தொடர் கன மழையையடுத்து காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவஆரம்பித்தன. வழக்கம் போல வட சென்னையிலும், கடலோர பகுதியிலும் இவை அதிக அளவில் காணப்பட்டன.

காலரா கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் மலேரியா இன்னும் ஒழிந்தபாடில்லை. தொடர்ந்து மலேரியா தாக்குதலால்மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

சென்னை மாநாகராட்சி தகவலின் படி கடந்த டிசம்பர் மாதம் 1576 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.ஜனவரியில் இது 1040 பேராக இருந்தது. நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கூட அதிக அளவில் தொடர்ந்துநோயாளிகள் வருவது அதிகாரிகளுக்கு கவலை அளித்துள்ளது.

வட சென்னையிலிருந்து தான் அதிக நோயாளிகள் தண்டையார்பேட்டை மருத்துவமனைக்கு வருகின்றனர். தினசரி இங்கு 100நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். கடலோர சென்னை நகர மக்களிடையேயும் மலேரியா தாக்குதல் இருக்கிறது.

கடுமையான காய்ச்சல், உடல் அசதி, உடல் நடுக்கம் ஆகியவையே மலேரியாவுக்கான அறிகுறிகள். பிலாஸ்மோடியம் வைவாக்ஸ்என்ற வைரஸ் மூலம் தான் தற்போது சென்னையில் மலேரியா பரவி வருகிறது. கொசுக்கள் தான் இந்த வைரஸை பரப்பும்முக்கிய ஏஜென்டு!

கொசுக்கள் தேங்குவதைத் தடுப்பதன் மூலம், தண்ணீரை நன்கு காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்துவதன் மூலம் மலேரியாவைத்தடுக்கலாம். வீட்டுக்கு அருகேயும், சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கியிருந்தால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிஅதன் மூலம் மலேரியா பரவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+