அதிமுகவில் சீட் கேட்கும் எஸ்வீ சேகர், பாண்டியன்
சென்னை:
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடக் கோரி முன்னாள் சினிமா நடிகரும், நாடக நடிகரும், ஜெயேந்திரரின் மாஜி சீடருமான எஸ்.வீ. சேகர் அதிமுக தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
திருமயம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி நடிகை சி.ஆர்.சரஸ்வதி மனு கொடுத்துள்ளார்.புரசைவாக்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் வெற்றிவேலும்(முன்னாள் காங்கிரஸ்காரர்) தி.நகரில் போட்டியிடக் கோரி மாணவர் அணி அதிமுக செயலாளர் கலைராஜனும் மனுகொடுத்துள்ளனர்.
அதே போல மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரி நடிகர் மண்வாசனை பாண்டியனும் விண்ணப்பம் அளித்துள்ளார். முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் வேடசந்தூர் தொகுதியைக் கேட்டும் மனு கொடுத்துள்ளார்.
காஞ்சி மடத்தின் அதி தீவிர சீடராக இருந்து எஸ்.வீ.சேகர் ஜெயேந்திரர் கைதுக்குப் பின் மடத்திலிருந்து ஒதுங்கிவிட்டார். இந் நிலையில் மயிலாப்பூர் தொகுதியை அவர் கண் வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதாவுக்காக அவர் மனு கொடுத்திருந்தாலும், தனக்கு அந்தத் தொகுதி கிடைக்கும் என சேகர் தரப்பு எதிர்பார்க்கிறது.












Click it and Unblock the Notifications