கள்ளச் சாராயம்: 4 பேர் சாவு-6 பேர் சீரியஸ்
சேலம்:
சேலம் அருகே விஷச்சாராயம் அருந்திய இரண்டு சகோதரர்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேரின் நிலைகவலைக்கிடமாக உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வேப்பிலைப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற கள்ளச்சாராய வியாபாரி, 10லிட்டர் சாராயத்தை அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு விற்றார்.சாராயத்தை வாங்கிய குணசேகரன் அதை எடுத்துச் சென்று தனது நண்பர்கள் விநயத்தான், செந்தில்குமார், சுப்ரமணியன்,வையாபுரி, மங்காயி, சோ, மாணிக்கம், சின்னப் பையன், சந்திரசேகரன் ஆகியோருடன் சேர்ந்து குடித்தார்.
சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே அனைவரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அனைவரையும் மருத்துவமனைக்கு ஊர்மக்கள் கொண்டு சென்றனர். இதில், குணசேகரன், சின்னப்பையன், சந்திரசேகரன், வையாபுரி ஆகியோர் இறந்தனர்.
மற்ற 6 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த குணசேகரனும், சந்திரசேகரனும் சகோதரர்கள் ஆவர். விஷச் சாராயத்தை விற்ற ராஜேந்திரன் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் கள்ளச் சாராயமே இல்லை என்று மார்தட்டிக் கொள்வது தமிழகஅரசு மற்றும் தமிழக போலீசாரின் முக்கிய வேலைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications