For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று திமுக கூட்டணி மிக முக்கிய ஆலோசனை: இருப்பது யார்-போக போவது யார் டென்சன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சென்னையில் புதன்கிழமை கூடி தொகுதிப் பங்கீடு தொடர்பாக முக்கிய ஆலோசனைநடத்தவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் நீடிக்கும், யார் யார் வெளியேறப்போகிறார்கள் என்பது குறித்து கிட்டத்தட்ட தெரிந்து விடும். இதனால் இக்கூட்டம் மிகுந்த அரசியல் எதிர்பார்ப்புகளைஏற்படுத்தியுள்ளது.

7 கட்சிக் கூட்டணி என்று ஜெயலலிதா மற்றும் அதிமுகவினரால் அழைக்கப்படும் இக் கூட்டணியில், மேலும் சில கட்சிகள்இருப்பதாலும், மேலும் சிலர் சேர முயற்சிப்பதாலும் தொகுதிப் பங்கீடு செய்ய முடியாத அளவுக்கு ஹவுஸ் புல்லாககாட்சியளிக்கிறது.

கூட்டணியில் உள்ள கட்சிகள், சும்மா ஒரு 50 குடுங்க.. ஒரு 40 போட்டுத் தாங்க என்று கூறு கட்டி தொகுதிகளைக் கேட்டுவருகின்றன.

கேட்கும் எண்ணிக்கையை அப்படியே கேட்பவர்களுக்கு கொடுத்துவிட்டால் அப்புறம் திமுக போட்டியிட தொகுதியே இருக்காதுஎன்ற நிலை நிலவுகிறது. இதனால் மண்டை காய்ந்து போயுள்ளது திமுக.

மதிமுகவோ கிட்டத்தட்ட கூட்டணியை விட்டு விலகி விடும் முடிவுக்கு வந்தேவிட்டது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை வரைகாத்திருந்துவிட்டு இடத்தைக் காலி செய்யும் முடிவில் இருக்கிறார் வைகோ. நிச்சயமாக கேட்கும் தொகுதிகள் கிடைக்காதுஎன்பதால் தன்னோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கூட்டிக் கொண்டு அதிமுகவுக்குப் போகமுயற்சித்து வருகிறார்.

அதே போல புதுவையில் அதிமுக கூட்டணி என்ற முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்டும் வந்துவிட்டது.

கத்தி மேல் நடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இருக்கும் பிரட்டை சமமாக பிரித்துக் கொடுத்தால்தான் கூட்டணியைக் காக்க முடியும். கொஞ்சம் அப்படி, இப்படி போனாலும் கதை பணால் ஆகும் நிலை.

கடந்த தேர்தலை விட அதிக அளவிலான தொகுதிகள் வேண்டும் என்பது தான் பாமக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கட்சிகளின் சிம்பிள் லாஜிக் . ஆனால், இந்த லாஜிக்கை அப்படியே இடப் பகிர்வு கால்குலேசனுக்குக் கொண்டு போககணிதவியல் விஞ்ஞானிகளின் உதவியைக் கூட திமுக நாடலாம்.

மிக சிக்கலான பார்முலா போட்டுத் தான் இந்த கணக்குக்கு விடை காண முடியும்.

இந்த பார்முலாவுக்குள் மதிமுக இஸ் ஈக்வல் டூ பாமக என்ற ஒரு சமன்பாட்டை சேர்க்கச் சொல்கிறார் வைகோ.

பாமகவோ இந்த முறை வட தமிழகத்தில் மட்டுமல்ல, தெற்கிலும் எங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக நிற்கநினைக்கும் இடங்களைக் கேட்டு, அல்ஜீப்ரா சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

திமுகவுக்கு அடுத்தபடியாக எங்களுக்கே அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்டு காங்கிரஸ் கட்சியோ வட்டத்துக்குள்அடங்காத ஒரு சதுரத்தை கொண்டு வந்து வைத்து அட்ஜஸ்ட் பண்ணச் சொல்கிறது.

இதில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அவ்வளவுதான்என்று திண்டிவனம் ராமமூர்த்தி வேறு தனியே போய் நின்று மிரட்டி வருகிறார்.

இவர்கள் ஒரு புறம் என்றால் இன்னொரு பக்கம் பாமக இஸ் ஈக்வல் டூ விடுதலைச் சிறுத்தைகள் பிளஸ் பாமக என்றுதிருமாவளவன் புதுசாக ஒரு பார்முலா கூறுகிறார்.

தியரி ஆப் எவரிதிங்கை பயன்படுத்தி ஏதாவது ஒரு தீர்வுக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சாக்பீசும் கையுமாக திமுககிளாஸ் ரூம் போர்ட் முன் நின்று கொண்டுள்ளார் கணித மேதை கருணாநிதி.

அவருக்கு அருகிலேயே ராமதாஸ், வைகோ உள்ளிட்டவர்கள் கலர் சாக்பீசுடன் போர்டில் நம்பர்கள் எழுதி விளையாடிக்கொண்டிருக்க, இந்த முறையும் நம்ம சாரோட (கருணாநிதி) இதயத்துல தான் இடமா என்று வெறுத்துப் போய் உட்கார்ந்துள்ளனர்ஓல்டு ஸ்டூடண்ஸ் அசோசியேசனைச் சேர்ந்த மாணவர்களான ஆர்.எம்.வீரப்பன், டாக்டர் சேதுராமன் போன்றோர்.

ஜோக்ஸ் அபார்ட்... இன்றைய கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்குத் தேவையான தொகுதிகள் குறித்த பட்டியலைகருணாநிதியிடம் வழங்கவுள்ளதாகத் தெரிகிறது. இக்கூட்டத்தின்போது யாருக்கு எத்தனை சீட் என்பது ஓரளவுக்கு முடிவாகிவிடும் எனத் தெரிகிறது.

தற்போதைய நிலவரப்படி திமுக 140 தொகுதிகள் வரை போட்டியிட விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளைஎதிர்பார்க்கிறது. பாமக 40 தொகுதிகள் வரை வேண்டும் என நினைக்கிறது. அதே அளவிலான தொகுதிகளையே மதிமுகவும்கோருகிறது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மொத்தமாக 45 தொகுதிகளை வலியுறுத்துகின்றன. (ஆனால் இருப்பதோ 234தொகுதிகள் தான்)

இவர்கள் தவிர, ராஜ. கண்ணப்பன் இருக்கிறார், கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியும் கூட்டணியில் சேரும் போலத் தெரிகிறது.இதுதவிர முஸ்லீம் லீக் கட்சி உள்ளது. அவர்களுக்கு ஆளுக்கு ஒரு சீட்டாவது கொடுத்தாக வேண்டும்.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 95 தொகுதிகள் வரை மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்குதிமுகவால் ஒதுக்க முடியும்.

காங்கிரஸுக்கு 40, பாமகவுக்கு 25, மதிமுகவுக்கு 15, இரு கம்யூனிஸ்டுகளுக்கும் சேர்த்து 15 என திமுக தரப்புதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இந்த இடங்களை எந்தக் கட்சியும் ஏற்றுக் கொள்ளாது.

அதிகமாக முரண்டு பிடித்தால் கூடுதலாக 5 தொகுதிகளை திமுக விட்டுத் தந்து அதை எல்லோருக்கும் பகிர்ந்து தர முன் வரலாம்.

கடைசியாக கிடைத்த தகவலின்படி, திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.அப்படி நேர்ந்தால் அது பாமக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடும்.

இப்படி கூட்டணியை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் மிக முக்கியமாகஆலோசிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு வைகோ வருவாரா என்பதே சந்தேகமாக உள்ள நிலையில், இக் கூட்டத்தை அதிமுகவும், உளவுப்பிரிவினரும் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

ஊரு ரெண்டுபட்டா...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X