அகதிகள் அதிகரிப்பு: கூடுதல் முகாம்கள் அமைப்பு

Subscribe to Oneindia Tamil

மண்டபம்:

இலங்கையிலிருந்து அகதிகள் அதிக அளவில் வரத் தொடங்கியிருப்பதால் மண்டபத்தில் கூடுதலாக தற்காலிக முகாம்கள்அமைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையிலிருந்து சில ஆண்டுகளாக அகதிகள் வருவது நின்று போயிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உள்படதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த பலரும் சொந்த நாட்டுக்குத் திரும்பவும் தொடங்கினர்.

இந் நிலையில் இலங்கையில் அமைதி ஒப்பந்தம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து போர்ச் சூழல் ஏற்பட்டது. இதனால் மீண்டும்அகதிகள் தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். தினமும் பலர் தனுஷ்கோடிக்குத் தப்பி வந்தவண்ணம் உள்ளனர். கடந்த சிலவாரங்களில் மட்டும் 402 பேர் வரை அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

அகதிகள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் தற்போது மண்டபத்தில் உள்ள தங்கும் முகாமில் இட நெருக்கடிஏற்பட்டுள்ளது. அங்கு ஒரே சமயத்தில் 100 பேர் மட்டுமே தற்காலிகமாக தங்க முடியும்.

இதையடுத்து கூடுதலாக தற்காலிக முகாம்களைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மேலும்சில தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையிலிருந்து அகதிகளாக வருவோர் முதலில் இங்கு தங்க வைக்கப்படுவர். அவர்கள் குறித்த முழு விவரங்களும்சேகரிக்கப்பட்ட பின்னர் அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டு பின்னர் அவர்கள் நிரந்தர முகாக்கு அனுப்பி வைக்கப்படுவர்என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மண்டபம் முகாமில் 1,160 இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களில் 94 பேர் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குடும்பத் தலைவருக்கு ரூ. 100 பணமும், மற்ற பெரியவர்களுக்கு தலா ரூ. 72ம்,குழந்தைகளாக இருந்தால் முதல் குழந்தைக்கு ரூ. 45ம், மற்ற குழந்தைகளுக்கு ரூ. 22.50ம் 15 நாட்கள் வரை உதவித் தொகையாகவழங்கப்படும்.

இதுதவிர ஒரு மாதத்திற்கு 12 கிலோ அரிசியும் வழங்கப்படும். ஐந்து லிட்டர் மண்ணெண்ணை, 2 கிலோ சர்க்கரையும் மாதம் ஒருமுறை வழங்கப்படும். சமையல் பாத்திரங்களும் அகதிகளுக்காக வழங்கப்படுகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் அகதிகள் அதிக அளவில் வரத் தொடங்கியிருக்கும் இந்த நிலையில் அகதிகளுக்கான உணவுமானியத்தை மத்திய அரசு பெரிய அளவில் ரத்து செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+