வாருங்கள் வைகோ... அதிமுக பகிரங்க அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

துரியோதனன் (கருணாநிதி) அருகில் இருந்த கர்ணனும் (வைகோ) சேர்ந்து பலியானான். அந்த நிலை உங்களுக்கு வரவேண்டாம். எனவே அங்கிருந்து வெளியேறி பாண்டவர்களாகிய (அதிமுக) எங்களுடன் வந்து சேருங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மதிமுக எப்போது திமுக கூட்டணியிலிருந்து வெளியேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிமுகவுடன் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில்வைகோவை அதிமுக கூட்டணியில் வந்து சேருமாறு, காளிமுத்து பகிரங்கமாக அழைத்துள்ளார்.

அதிமுக தரப்பிலிருந்து வைகோவுக்கு வந்துள்ள முதல் அதிகாரப்பூர்வ அழைப்பு இது என்பதால் மதிமுக விவகாரத்தில் புதியதிருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் காளிமுத்து பேசுகையில்,

கருணாநிதி முதல் ஆகி எம்ஜிஆரை தூக்கி எறிந்தார். எம்ஜிஆரோ கருணாநிதியை தேய்பிறையாக்கி கோட்டையை விட்டேஅகற்றினார். பிறகு முதல்வர் அம்மா, புரட்சித் தலைவர் அவர்கள் திமுகவை அமாவாசையாகிகனார். ராஜ்ஜியத்தை ஆண்டகருணாநிதி பூஜ்ஜியம் ஆனார்.

ஆனால், 1996ல் கம்பங் கொல்லைக்கு காட்டெருமையை காவல் வைத்தது போல, கொய்யா தோப்புக்கு குரங்கை காவல்வைப்பது போல, திருடன் கையில் சாவிக் கொத்தை கொடுப்பது போல கருணாநிதியை முதல்வராக்கிவிட்டனர். சீதேவியைபோகவிட்டு மூதேவியை பதவியில் அமர்த்தினர்.

கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் புரட்சித் தலைவியை பழிவாங்கினார். தனி கோர்ட் அமைத்து அவமதித்தார். இனி அதிமுகதேறாது, கதை முடிந்தது. வாழாது, வளராது என்றார். ஆனால், தோல்விப் பள்ளத்தாக்கில் இருந்து அதிமுகவை சிகரத்தில் மீண்டும்அமர்த்தினார் அம்மா. விழுந்ததும் எழுந்தோம், எழுந்ததும் நின்றோம், நின்றதும் வென்றோம்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்களில் ஒருவர் மட்டுமே (வைகோ), நல்ல அரசியல்வாதி, மரியாதைக்குரியஅரசியல்வாதி, கெளரவம் மிக்க அரசியல்வாதி. அவர் இனியும் அங்கே இருக்கக் கூடாது. உடனடியாக வெளியேறி விடவேண்டும்.

மூங்கில் காட்டில் பற்றி எரியும் தீயில், சந்தன மரங்களும் சேர்ந்துதான் கருகிப் போகும். மகாபாரதத்தில் கூட, பீஷ்மர், துரோனர்,கர்ணன் போன்ற மாபெரும் மனிதர்கள் கூட, தீய சக்தியான துரியோதனனுடன் கூட்டு சேர்ந்த ஒரே காரணத்திற்காக மடிந்துபோயினர். அந்த நிலை உங்களுக்கும் வர வேண்டுமா?

என் சகோதரன் கர்ணனே (வைகோ) நீயும் அழிந்து போவாய். பீஷ்மாச்சாரியாரே (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?),துரோணாச்சாரியாரே (இந்திய கம்யூனிஸ்ட்?) நீங்களும் அழிவீர்கள். தீய சக்தியோடு சேர்ந்து அழியாமல் இருக்க தப்பிவந்துவிடுங்கள்.

கெளரவர்களிடமிருந்து (திமுக கூட்டணி) விலகி பாண்டவர்களாகிய எங்களுடன் கை கோர்க்க வாருங்கள் என்று அழைக்கிறேன்.நான் கர்ணன் என யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். வைகோவே விரைந்து வாருங்கள்.

திமுகவின் உண்மையான பெயர் தெரியுமா?. திருக்குமாரர் முன்னேற்றக் கழகம். ஸ்டாலினை முதல்வராக்கத் தான் இந்தக் கட்சி.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். இதுதான் திமுக தலைமையின் ஒரே லட்சியம். இதுஎல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.இதை வைகோவும் உணர்ந்திருப்பார். எனவே இனியும் அங்கிருப்பது அவருக்கு மரியாதை இல்லை. எனவே அதிமுகவுடன்கூட்டணி அமைக்க அவர் முன்வர வேண்டும்.

சட்டசபைக்கு வர மட்டுமே தெரிகிறது ஸ்டாலினுக்கு. ஒரு கேள்வி கூட கேட்கத் தெரியவில்லை. இவர் எதற்கு முதல்வர் பதவிக்குஆசைப்படுகிறார்? திமுக ஒரு குடும்பக் கட்சி. மத்தியில் 13 அமைச்சர்கள் தமிழகத்திலிருந்து போயிருக்கிறார்கள். ஆனால்மாநிலத்திற்கு என்ன பலன்?

திமுக தலைமையின் குடும்பம்தான் பலன் மேல் பலனைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கருணாநிதி முல்வராக இருந்தபோது, குண்டுவெடிக்காத நாளே தமிழகத்தில் கிடையாது என்று சொல்லலாம். கோவையில் 26நிமிடத்தில் 30 குண்டுகள் வெடித்தன.

சட்டம் ஒழுங்கு சரியில்லாததால் ராணுவம் வந்தது. ஆனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டில் ராஜ்ஜயம் நடத்தி வந்த சந்தனவீரப்பனை சுட்டு வீழ்த்தி சாதனை படைத்தார் ஜெயலலிதா. இதற்காகவாவது அவர் 100 ஆண்டுகள் முதல்வராக இருக்கவேண்டும்.

தமிழக கடற்பகுதிகளை 800 கிலோமீட்டர் வேகத்தில் சுனாமிப் பேரலைகள் தாக்கி சீரழித்தபோது, அப்பகுதிகளை 1,000கிலோமீட்டர் வேகத்தில் சென்று பார்த்து பரிதவித்த மக்களுக்கு ஆறுதல் கூறினார் ஜெயலலிதா. கன, மழை வெள்ளத்தால்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடோடிச் சென்று உதவிகளை வழங்கினார்.

ஆனால் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே அரசு உதவிகளை வழங்கியது என்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் கூறுகிறார். அவர் கூறுகிறபடி வைத்துக் கொள்வோமானால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிதியுதவி,பொருளுதவி பெற்றவர்கள் ஆளுங்கட்சியினர் என்றால் வரப் போகிற தேர்தலில் திமுகவுக்கு ஒரு இடத்தில் கூட டெபாசிட்கிடைக்காது.

சாலைப் பணியாளர்கள் வேலை கேட்டார்கள். கொடுத்தாகிவிட்டது. இதற்காக புரட்சித் தலைவி, அம்மாவுக்கு திமுக நன்றிசொல்ல வேண்டாமா?

மூப்பனார் பாவம், நல்ல தலைவர். அவரது மகன் ஜி.கே.வாசன். அவருக்கு என்ன இலாகா (திட்ட அமலாக்கத்துறை)கொடுத்திருக்கிறார்கள்? நல்ல இலாகா கொடுத்திருக்கக் கூடாது? அவரது இலாகாவின் பெயர் என்ன, அதன் பயன்கள் என்னஎன்பதை எந்தக் காங்கிரஸ்காரராவது சரியாக சொன்னால் அவர்களுக்கு நான் நூறு ரூபாய் பரிசு அளிக்கிறேன்.

நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருக்கிறார். அவர் சதி மந்திரி. தமிழகத்துக்கு நிதி வராமல் பார்த்துக் கொள்வதே அவர் வேலை. சிலகோழிகள் அதிகாலை கூவும், சில சாமத்தில் கூவும். சிதம்பரம் சாமக் கோழி. சாமக் கோழி கூவுவது நல்லதல்ல.

நல்லவர்கள் நம் பக்கம். அந்தப் பக்கம் உள்ள நல்லவர்களும் விரைவில் நம் பக்கம் வருவார்கள். ஜெயலலிதா மீண்டும்முதல்வர் ஆனால் எல்லா தொழில்களும் உருவாகும், எல்லா நன்மைகளும் உங்களுக்கு வரும். எனவே மீண்டும் ஜெயலலிதாவைமுடிசூடா ராணியாக்கிடுவோம் என்றார் மாஜி சபா காளிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+