பாலாறு அணை: தமிழ-ஆந்திர மோதல் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது ஆந்திர மாநிலத்தின் உரிமை. அதை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று முதல்வர் ராஜசேகர ரெட்டி கூறியுள்ளார்.

சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பானபூர்வாங்கப் பணிகள் தொடங்கி விட்டன.

இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும் வறட்சி ஏற்படும் என்பதால் இத் திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது. திட்டத்தைக் கைவிடுமாறு ஆந்திரமுதல்வருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். திமுக உள்ளிட்டஎதிர்கட்சிகளும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந் நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி,

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது என்பது ஆந்திர மாநிலத்தின் உரிமை. இதை விட்டுக் கொடுக்க மாட்டோம். இது ஒருசிறிய பிரச்சினைதான். ஆந்திர நலன் கெடாத வகையிலும், அதேசமயம் அண்டை மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாலாற்று அணை தொடர்பாக தமிழக தல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்திற்கு இதுவரை நான் பதில் எழுதவில்லை.விரைவில் பதில் அனுப்புவேன் என்றார் ரெட்டி.

வேலூரில் போராட்டம்:

இதற்கிடையே பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து வேலூர் மாவட்டம் முழுவதும் வரும் 28ம் தேதி முழுக்கடையடைப்பு நடத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவு செய்துள்ளது.

வேலூரில் இப் பேரவைக் கூட்டம் நடந்தது. இதில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் முயற்சியில்இறங்கியுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலிப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் ஆந்திர அரசுபிடிவாதமாக இருப்பதால் அந்த அரசைக் கண்டித்து முழுக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட வணிகர் சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

வரும் 28ம் தேதி காலை முதல் மாலை 6 மணி வரை முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என பேரவைத் தலைவர்வெள்ளையன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+