செல்போனில் கிரிக்கெட் ஸ்கோருக்கு தடை
சென்னை:
எஸ்.எம்.எஸ் மூம் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ஸ்கோரை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்துசெல்போன் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் ஸ்கோரை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்ப தங்களுக்கு மட்டுமேஉரிமம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் பல்வேறு செல்போன் நிறுவனங்கள் இதை மீறி எஸ்.எம்.எஸ். மூலம் ஸ்கோரை வெளியிட்டு வருவதாகவும், அதை தடைசெய்ய வேண்டும் என்று கோரி சென்னை அடையாரைச் சேர்ந்த மார்க்ஸ்மேன் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், ஏர்டெல், ஹச், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட 18 செல்போன்நிறுவனங்களுக்கு ஸ்காரை வெளியிட தடை விதித்தார்.
இந் நிலையில் தடை விதிக்கப்பட்ட செல்போன் நிறுவனங்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.அதில், உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை விலக்கி உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இதை அவசர வழக்காக விசாரிக்குமாறு ஹச் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரினார்.
இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சொக்கலிங்கம்அறிவித்தார்.












Click it and Unblock the Notifications