22ம் தேதிக்குள் தொகுதிப் பங்கீடு: கருணாநிதி
சென்னை:
இரண்டு வாரங்களுக்குள் (22ம் தேதிக்குள்) திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுப் பங்கீடு முடிவடைந்துவிடும்என கருணாநிதி கூறியுள்ளார்.
தொகுப் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் இன்றுநடந்தது. திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா என்ற பெரும் அரசியல் கேள்விக்குக்கு இடையே நடந்த இக் கூட்டத்தில் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ பங்கேற்பாரா என்பது சந்தேகத்துக்கிடமாகவே இருந்தது. ஆனாலும் அவர் பங்கேற்றார்.பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, (ராமதாஸ் வரவில்லை), காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரதராஜன், ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்தா.பாண்டியன், மகேந்திரன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் காதர் முகைதீன், சையத் சத்தார் ஆகியோர் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி. அப்போது கேட்கப்பட்டகேள்விகள், பதில்கள்:
கேள்வி: கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது?
கருணாநிதி: நான் தொடக்க உரையாற்றினேன். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசினார்கள். கூட்டணியை உறுதிப்பாட்டோடுதொடர்ந்து கொண்டு செல்ல அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசினார்கள்.
எல்லா தலைவர்களும் பேசியதன் அடிப்படையில் இன்னும் ஒரு வாரத்தில் அதாவது, 15ம் தேதிக்குள், ஒவ்வொரு கட்சியும்பகிர்ந்து கொள்ள விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை, பெயர்கள், இவற்றை கூட்டணிக் கட்சித் தலைவரான என்னிடம்அளிப்பது என்றும், அந்தத் கட்சித் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் அழைத்து கூட்டணித் தலைவர் (கருணாநிதி) மற்றும்தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்கள் கலந்து பேசி விவாதித்து முடிவுகளை எடுப்பது என்றும்தீர்மானிக்கப்பட்டது.
அப்படி எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனைத் தொகுதிகள் என்ற எண்ணிக்கையைதிருச்சியில் நடக்கும் திமுக மாநில மாநாட்டில் அறிவிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் மாநாட்டுக்குப் பின்னர் வெளியிடப்படும். தேர்தல் தேதி இன்னும் வராததால்தொகுதிப் பெயர்கள் இப்போது வெளியாகாது.
கேள்வி: தொகுதிப் பங்கீடு எப்போது முடிவாகும்?
15ம் தேதிக்குப் பின் ஒரு வார காலத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் தொகுதியின் பெயர், தொகுதிகளின் எண்ணிக்கையைமுடிவு செய்துவிடுவோம். மாநாட்டில் எண்ணிக்கையை வெளியிடுவோம். எந்தெந்தத் கட்சிக்கு எந்தத் தொகுதி என்ற விவரத்தைவெளியிட மாட்டோம். பின்னர் தான் வெளியிடுவோம்.
கேள்வி: திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?
பதில்: (பலமாக சிரித்தபடி) 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.
கேள்வி: விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்ப்பீர்களா?
பதில்: அந்த விவாதம் இன்றைய கூட்டத்தில் நடக்கவில்லை.
கேள்வி: அதிமுக கடந்தமுறை 140 தொகுதிகளில் போட்டியிட்டதாக கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் நீங்கள் பேசியதாகதகவல் கிடைத்துள்ளது. திமுக எத்தனை இடங்களில் நிற்கும்?
பதில்: நான் பேசியதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். சில பேர் (வைகோ, ராமதாஸ்) குறைத்துக் கொள்ள வேண்டும்என்றும், திமுகவும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் பேசினேன்.
திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் வெளியேறாது என்ற நம்பிக்கை எனக்குஉள்ளது. கூட்டணியை சிதைக்க ஆளுங்கட்சியும், சில காவல்துறை அதிகாரிகளும்முயற்சி செய்தார்கள். ஆனால் அது பலிக்கவில்லை.
தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொருத்தவரை கூட்டணிக் கட்சிகளைப் போலவே,திமுகவும் சில தியாகங்களை செய்ய காத்திருக்கிறது.
கேள்வி: தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள மற்ற கட்சிகள் தயாரா?
பதில்: அது பேச்சுவார்த்தையில் தான் தெரியும்.
கேள்வி: கம்யூனிஸ்டுகள் 10 தொகுதிகளுக்கு மேல் கேட்கிறார்களாமே?
பதில்: அதுபற்றி அவர்களிடம் தான் பேச முடியும். உங்களிடம் பேச முடியாது.
இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.
வரும் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதி பேசி தொகுதிப் பங்கீடு குறித்து முடிவுசெய்யவுள்ளார்.
இன்றைய கூட்டத்தின் மூலம் திமுக கூட்டணிக் கட்சிகள் குறித்த சலசலப்புக்குதற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்துள்ளார் கருணாநிதி. தொகுதிப் பங்கீடுதொடர்பான பேச்சுவார்த்தைகள் 15ம் தேதி ஆரம்பித்த பின்னரே கூட்டணியில் நீடிக்கப் போவது யார்,கிளம்பப் போவது யார் என்பது தெரியும்.












Click it and Unblock the Notifications