ஜெயேந்திரர் வழக்கு: கோர்ட்டுக்கு குண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
ஜெயேந்திரர் தொடர்புடைய சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணை நடக்கும்
பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.புதுவையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் அடங்கியுள்ள நீதிமன்ற வளாகத்திற்கு இன்று காலைதொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. தொலைபேசியில் பேசிய நபர், நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகவும், பிற்பகல் 2.40 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் எனவும் கூறி விட்டு வைத்து விட்டார்.
இதுகுறித்து நீதிமன்ற மேலாளர் மாரியப்பன் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்துவந்தனர்.
வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவி, மோப்ப நாய்கள் சகிதம் போலீஸார் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனைநடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக புரளி கிளப்பிய நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications