கொடைக்கானல் மலையில் பயங்கர காட்டுத் தீ

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்:

கொடைக்கானலில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயால் ஏராளமான மரங்கள் கருகியுள்ளன. காட்டு விலங்குகள் ஊர்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கொடைக்கானலை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. பாம்பார்புரம் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்லூரியின் சமையல் அறையிலிருந்து வெளியான தீப்பொறியால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து பரவிய தீ தற்போது செண்பகனூர், கோக்கர்ஸ் வாக், பெருமாள்மாலை வனப் பகுதியில் பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்தத் தீக்கு இதுவரை 50 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.

தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வசிப்போர் கூட கொடைக்கானல் மலையில் காட்டுத் தீ பயங்கரமாக எரிவதைப் பார்க்க முடிகிறது. இந்தத் தீயை அணைக்க வனத்துறையினர் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இந்தத் தீயில் ஏராளமான காட்டு எருமைகள், கரடிகள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், பல காட்டு விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து விடும் அபாயம் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+