முத்துலட்சுமி கோரிக்கை ஏற்று நீதிபதிகள் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பன் மோரில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக அவனது மனைவி முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கைவிசாரித்து வந்த இரு உயர் நீதிமன்ற நீதிபதிகளை, முத்துலட்சுமியின் கோரிக்கையை ஏற்று மாற்றிவிட்டு வேறு இருநீதிபதிகளிடம் வழக்கை ஒப்படைத்தார் தலைமை நீதிபதி ஷா.

சந்தனக் கடத்தல் வீரப்பன் அதிரடிப் படையினரின் தூண்டுதலால் மோரில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டான். இதுதொடர்பாகஅதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முத்துலட்சுமி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் விசாரித்து வந்தனர். இந் நிலையில் இன்று தலைமைநீதிபதி ஏ.பி.ஷாவை சந்தித்த முத்துலட்சுமி அவரிடம் ஒரு மனுவை அளித்தார்.

அதில், ஏற்கனவே அதிரடிப்படையினரால் மலைவாழ் மக்கள் பாதிக்கப்பட்ட வழக்கு ஒன்றில், விஜயக்குமாரை, நீதிபதிகற்பகவிநாயகம் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார். எனவே இந்த வழக்கை நீதிபதி கற்பகவிநாயகம் விசாரிக்கக் கூடாதுஎன்று கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கிலிருந்து நீதிபதிகள்கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகிய இருவரையும் நீக்கி விட்டு அதற்குப் பதிலாக நீதிபதிகள் சதாசிவம் மற்றும்சம்பத்குமார் ஆகியோரை நியமித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் முன் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது முத்துலட்சுமி தரப்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு நீதிபதிகள்ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+