மதிமுகவுக்கு 30 சீட்கள்: ஜெயலலிதா தூண்டில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் இருந்து மதிமுகவை இழுக்க அக் கட்சிக்கு 30 இடங்கள் வரை தருவதாக அதிமுக பேரம் பேசிவருகிறது.

35 இடங்கள் கொடுத்தால் அவர்களுடன் கூட்டணி என திமுக தலைவர் கருணாநிதிக்கும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும் தனித்தனியே கடிதங்கள் அனுப்பியுள்ளார் வைகோ.

இந் நிலையில் வைகோவுக்கு 30 இடங்களையும், கூடவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 இடங்களும்,இந்திய கம்யூனிஸிட் கட்சிக்கு 15 இடங்களும் தரத் தயார் என அதிமுக தரப்பில் இருந்து அந்தக் கட்சிகளுக்குதகவல் அனுப்பப்பட்டுள்ளது.

திமுகவிலோ மதிமுகவுக்கு அதிகபட்சமாக 20 இடங்கள் வரைத் தரத் தயார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.ஆனால், பாமகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் சேர்த்து 35 இடங்கள் வரை திமுக தரும் என்று தெரிகிறது.

பாமகவை விட தனக்கு குறைவான இடங்கள் தரப்படுவதை இந்த முறையும் ஏற்க வைகோ தயாராக இல்லை.இதனால் அதிமுகவுடன் மேலும் பேசி 35 இடங்களை வாங்கிக் கொண்டு அங்கேயே செட்டில் ஆவார்என்கிறார்கள்.

இடதுசாரிக் கட்சிகளும் இந்த முறை இரட்டை இலக்கத்தில், (தலா 18) இடங்களைக் கேட்டு திமுகவுக்கு நிபந்தனைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்தக் கட்சிகளுக்கு அதிகபட்சம் 10 இடங்களை திமுக தரும் என்றுதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+