நாளை தைப்பூசம்: பழனியில் விழாக்கோலம்

Subscribe to Oneindia Tamil

பழனி:

Muragan

தைப்பூச திருவிழா பழனி முருகன் கோவில் உள்ளிட் முருகப் பெருமானின் தலங்களில் நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழனியில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

தைப்பூசத் திருவிழா பிற முருகன் தலங்களை விட பழனியில் வெகு விமரிசையாக இருக்கும். கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இன்று முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது.

முன்னதாக ரூ. 50 லட்சம் செலவில் முற்றிலும் தங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவாமி சன்னதி கருவறை நுழைவாயில்காலையில் திறந்து வைக்கப்பட்டது.

நாளை காலை தைப்பூச்த திருவிழா நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு சண்முகா நதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி, மாலை 4மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 7.30மணிக்கு மண்டகப்படியும், இரவு தங்க குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும்நடைபெறுகிறது.

14ம் தேதி தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுகிறது. தைப்பூசத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்துஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+