பாமகவில் திருமாவுக்கு 5 சீட்: திமுக ஒப்புதல்?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வலு விடுதலைச் சிறுத்தைகளிடம் உள்ளது. ஆனால் கட்சிக் கொடியைப்பிடித்துக் கட்ட ஆள் இல்லாத கட்சிகளுக்கெல்லாம் இங்கே தொகுதிகளை வாரி வழங்குகிறார்கள் என விடுதலைச் சிறுத்தைகள்பொதுச் செயலாளர் திருமாவளவன் காட்டமாக கூறியுள்ளார்.

வன்கொடுமைத் தடுப்புச்சட்டம், கொத்தடிமை ஒழிப்புச் சட்டங்களை சரிவர அமல்படுத்த வேண்டும், இருளர் சமூகத்தினருக்குபழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் திருமாவளவன் பேசுகையில், நமக்குப் பாம்பு பிடிக்கவும் தெரியும், ஆட்சியைப் பிடிக்கவும் தெரியும். விடுதலைச்சிறுத்தைகளை தங்களது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வைகோ, வாசன், தா.பாண்டியன் என யாராவது கூறினார்களா?டாக்டர் ராமதாஸ்தான் இதை ஒரு வருடமாக கூறி வருகிறார். ஆனால் அதை கேட்க அங்கே நாதியில்லை.

தேர்தல் வருகிறது என்றவுடன் ஜெயலலிதா பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். அதேபோல இருளர்சமூகத்தினருக்கும் சலுகைகளை வழங்க வேண்டும். நம்மிடம் அரசியல் அதிகாரம் இருந்தால்தான் அடக்கு முறைகளை ஒடுக்கமுடியும், ஒழிக்க முடியும்.

வன்னியர்களும், தாழ்த்தப்பட்டோரும் வட மாவட்டங்களில் வலுமிக்கவர்களாக உள்ளனர். அதேபோல 234 தொகுதிகளிலும்வெல்லும் திறம் நம்மிடம் உண்டு. ஆனால் இன்றோ ஒரு கூட்டணியில் (திமுக) கட்சிக் கொடியை பிடித்துக் கட்டக் கூடஆளில்லாத கட்சிகளுக்கெல்லாம் தொகுதிகளை தாராளமாக தருகிறார்கள். இதுவும் ஒருவகையில் அடக்குமுறைதான் என்றார்திருமாவளவன்.

இதற்கிடையே திருமாவளவன் அதிமுக பக்கமாய் போய்விடாமல் தடுக்கும் வேலைகளில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தீவிரமாக ஈடுபட்டுள்ளார். திருமாவை திமுக கூட்டணியில் சேர்க்க கருணாநிதி தயாராக இல்லை.

இருந்தாலும் தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சில தொகுதிகளை திருமாவுக்கு வழங்க ராமதாஸ் முன் வந்துள்ளார். இதுதொடர்பாக கருணாநிதியுடன் பேசி அவரை ராமதாஸ் சமாதானப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது.

கடந்த முறை 27 தொகுதிகளை பாமகவுக்கு திமுக ஒதுக்கியது. இம்முறை 36 தொகுதிகள் கேட்கும் ராமதாஸ் அதில் 5 தொகுதிகளைவிடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கிக் கொள்வதாக கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியுடம் இதை ஏற்றுக் கொண்டுவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+