கருணாநிதிக்கு எதிராக டி.ஆர்: ஜெ திட்டம்ர்
சென்னை:
![]() |
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு தனது கட்சி முழு ஆதரவு அளிக்கும் என முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து லட்சிய திமுகதலைவர் விஜய டி.ராஜேந்தர் உறுதியளித்தார்.
திமுகவில் கொள்கை பரப்பு செயலாளராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த டி.ராஜேந்தர் கருத்து வேறுபாடு காரணமாகஅக்கட்சியிலிருந்து விலகினார். லட்சிய திமுக என்ற புதுக் கட்சியையும் அவர் தொடங்கினார்.
இக்கட்சி கடந்த காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது. ராஜேந்தர், அதிமுகவேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார்.
இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை அவர் திடீரென சந்தித்து சட்டசபைத் தேர்தலில் தனது கட்சி அதிமுகவுக்காக தீவிரபிரசாரம் செய்யும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், டி.ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் உடனிருந்தனர்.
வரும் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தின் கீழ் ராஜேந்தர் போட்டியிடக் கூடும் என்றும் தெரிகிறது. அதற்காகஒரே ஒரு சீட் கேட்டதாகவும் சொல்கிறார்கள்.
சென்னையில் போட்டியிடப் போகும் திமுக தலைவர் கருணாநிதி அல்லது ஸ்டாலினுக்கு எதிராக அவரை ஜெயலலிதா களமிறக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications