வீடு புகுந்து பணம், நகையை சுருட்டிய போலீஸ்
சென்னை:
சென்னை ஆலந்தூரில் போலீஸ் சோதனை என்ற பெயரில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ. இரண்டரை லட்சம் ரொக்கம்மற்றும் நகைகளை சிலர் சுருட்டிச் சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. இது தொடர்பாக போலீஸாருக்கு புகார்கள்போவது வழக்கம். பேருக்கு யாரையாவது பிடித்து அவர்களிடம் வசூல் செய்வது போலீசாரின் வழக்கம்.
இந் நிலையில் ஆலந்தூரில் உள்ள சில வீடுகளை போலீஸார் சிலர் சோதனையிட்டனர்.
அப்போது குணா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்தவர்களை வெளியே போகுமாறு கூறிவிட்டு வீடுமுழுவதையும் சல்லடைபோட்டு சோதனை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவைத் திறந்து அதற்குள் இருந்த ரூ. 2.5லட்சம் பணம், சில தங்க நகைகளை பறிமுதல் செய்து கொண்டு கிளம்பினர்.
இதுகுறித்து குணாவின் வீட்டாரும், அக்கம் பக்கத்தினரும் கேள்வி எழுப்பியபோது காவல் நிலையத்திற்கு வந்து அவற்றைபெற்றுக் கொள்ளுமாறு கூறி விட்டுச் சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து குணா குடும்பத்தினர் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சோதனை என்ற பெயரில் வந்துபோனவர்கள் உண்மையிலேயே காவல்துறையினர்தானா அல்லது காவலர்கள் போர்வையில் வந்த திருடர்களா என்பது குறித்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications