தேர்தல் பிரசாரத்திற்கு சோனியா-ராகுல் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பிரசாரம் செய்ய பிரதமர் மனமோகன் சிங், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வரவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவரும், மத்திய இணைஅமைச்சருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மார்ச் இறுதிவாக்கில், பிரதமர் மன்மோகன் சிங், அன்னை சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அடுத்தடுத்து பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழகம் வரவுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றியைப் பெறும். தோல்வி பயத்தில்தான் தினந்தோறும் பல்வேறு சலுகைகளைமுதல்வர் ஜெயலலிதா அறிவித்து வருகிறார். இதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள். ஏமாறப் போவதுஜெயலலிதா தான் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications