அதிமுகவுடன் கூட்டு இல்லை-இ. கம்யூனிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

கூடுதல் தொகுதிகள் தந்தாலும் கூட அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மூத்ததலைவர் நல்லகண்ணு, மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக முக்கியமாகஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான்எங்களது ஒரே லட்சியம். எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் எக்காரணம் கொண்டும், கூடுதல் தொகுதிகள் தருவதாககூறினாலும் கூட அவர்களுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது திமுக கூட்டணியில் 7 கட்சிகள் உள்ளன. மேலும் சில கட்சிகள் வந்தாலும் வரவேற்போம். தொகுதிப் பங்கீட்டைப்பொருத்தவரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம். கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றார் தா.பாண்டியன்.

வழக்கமாகவே பாண்டியனுக்கும் திமுகவுக்கும் ஆகாது. இருப்பினும் ஜெயலலிதா எதிர்ப்பு நிலையில் மூத்த தலைவரானநல்லகண்ணு மற்றும் முக்கிய தலைவரான மகேந்திரன் ஆகியோர் மிகத் தீவிரமாக உள்ளனர்.

அதிமுகவுடன் எக்காரணம் கொண்டும் கூட்டணி கூடாது என நல்லகண்ணு கூறிவிட்டார். இதையடுத்தே இதுவரை அதிமுகவுக்குஎதிரான நிலையை தா.பாண்டியன் எடுத்துள்ளார்.

பலம் அறிந்து தொகுதிகள்: மார்க். கம்யூ

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா கூறுகையில்,

கூட்டணியில் உள்ள கட்சிகளின் உண்மையான பலத்தை அறிந்து அதற்கேற்ப தொகுதிகளை திமுக வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னை அருகே மணலியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைமை அலுவலகம் புதிதாககட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டடத்தை திறந்து வைத்து சங்கரய்யா பேசுகையில்,

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது குறித்து சிலர் விமர்சிக்கிறார்கள். 2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலில்தன்னை மதச்சார்பற்ற கூட்டணி என்று ஜெயலலிதா கூறியதால்தான் அவருடன் கூட்டணி வைத்தோம். வெற்றி கண்டோம்.

ஆனால் அதே ஜெயலலிதா 2004ல் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் அக் கூட்டணியிலிருந்து விலகினோம்.திமுகவுடன் கூட்டணி அமைத்தோம், வெற்றி பெற்றோம்.

இப்போது திமுக அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளோம்.

வருகிற தேர்தலில் நமது அணுகுமுறைகள் என்ன என்பதை மதுரையில் நடைபெறும் அரசியல் மாநாட்டில் முடிவுசெய்யவுள்ளோம்.

திமுக கூட்டணியில் நிறையக் கட்சிகள் இருப்பதால் தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. ஆனால், கட்சிகளின்உண்மையான பலத்தை அறிந்த பின்னர் அதற்கேற்ப தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும்.

வரப் போகிற ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு திமுக என்ன செய்யப் போகிறது என்பதையும் அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும்என்றார் சங்கரய்யா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+