கார்த்திக்கை வளைக்க நடராஜன் முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நீண்ட காலமாக அரசியலில் இருந்து வரும் என்னை தமிழக பார்வர்ட் பிளாக் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர்கார்த்திக் அவமானப்படுத்தி, புறக்கணிக்கிறார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளரான சந்தானம் எம்.எல்.ஏ.வெளிப்படையாக புலம்பியுள்ளார்.

அதிமுக ஜால்ராவான சந்தானம், அக் கட்சியின் ஆதரவோடு கார்த்திக்கை சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால்,அவரது நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக கார்த்திக்குக்கு முக்குலத்தோர் மத்தியில், குறிப்பாகஇளைஞர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

இதையடுத்து சிறிய அளவில் இயங்கி வந்த சில பார்வர்ட் பிளாக் கட்சிகள் கார்த்திக் தவைமையிலான பார்வர்ட் பிளாக்கில்இணைந்து வருகின்றன. சந்தானத்தால் 15 ஆண்டுகளாக செய்ய முடியாத இந்த இணைப்பை ஒரு மாதத்தில் நடத்தி முடித்துள்ளார்கார்த்திக்.

இதனால் கார்த்திக்கை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அல்லாட ஆரம்பித்துள்ளார் சந்தானம்.

கார்த்திக்கின் பரிந்துரைப்படி சந்தானத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தேசியத் தலைவரான பிஸ்வாஸ்.திமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் இருக்கும் பிஸ்வாஸ், சந்தானத்தை கட்சியை விட்டு நீக்கும் முடிவில் இருக்கிறார்.

இந் நிலையில், சந்தானம் கூறுகையில், அதிமுக ஆட்சியில் சாதிக் கலவரமே இல்லை. மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எனவே வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன்தான் பார்வர்ட் பிளாக் கட்சிகூட்டணி அமைக்க வேண்டும் என்று மேலிடத்தில் தெரிவித்துள்ளோம்.

கார்த்திக் என்னை மதிப்பதில்லை. நீண்ட காலமாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். சாதாரண ஒன்றியத் தலைவர்பதவியிலிருந்து எம்.எல்.ஏ. வரை பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். இப்படிப்பட்ட நான் தன் மானத்தை எதிர்பார்ப்பதில்தவறில்லையே?

ஆனால் கார்த்திக் என்னைப் புறக்கணிக்கிறார். கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் அவர் என்னைக் கூப்பிடுவதில்லை.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பல்வேறு பிரிவுகளை மீண்டும் ஒருங்கிணைப்பதில் தவறே இல்லை. ஆனால் இணைகிறபிரிவுகளுக்கு தொண்டர் பலம் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இப்போது பார்வர்ட் பிளாக்கில் இரண்டு பிரிவுகள்தான்உள்ளன.

ஒன்று அதிமுகவை ஆதரிப்போர், இன்னொன்று திமுகவை ஆதரிப்போர். பார்வர்ட் பிளாக் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள்,தொண்டர்கள் அதிமுகவுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதை கட்சி மேலிடம் புறக்கணிக்காது என்று நம்புகிறேன் என்றார் சந்தானம்.

இதற்கிடையே கார்த்திக் திமுக பக்கம் போய்விடாமல் தடுக்கும் முயற்சிகளில் சசிகலாவின் கணவர் நடராஜன் தீவிரமாகஈடுபட்டுள்ளார். (வெளியில், ஜெயலலிதாவுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறி வரும் இவர் அதிமுக கூட்டணிக்குஆட்களை இழுக்கும் வேலைகளில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது).

சமீபத்தில் நடராஜனின் சகோதரர் ஒருவரும் சந்தானமும் நேரில் கார்த்திக்கை சந்தித்து, நம்ம பிரச்சனையை நாமேதீர்த்துக்குவோம். அதிமுக கூட்டணி தான் வேணும்னு பிஸ்வாஸ் கிட்ட வலியுறுத்துங்க என்று கோரிக்கை வைத்தார்களாம்.

மேலும் தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை வாபஸ் வாங்கச் செய்யுமாறும் கார்த்திக்கிடம் கெஞ்சியுள்ளார் சந்தானம்.

ஆனால், கார்த்திக் தரப்பில் இதற்கு திட்டவட்டமாக பதில் ஏதும் தரப்படவில்லையாம். இதனால் வெறுப்புடன் திரும்பிவந்திருக்கும் சந்தானம், பார்வர்ட் பிளாக்கை உடைத்துக் கொண்டு வெளியே வந்தால் அதிமுகவிடம் தனக்கு ஒரு சீட் உறுதி என்றநம்பிக்கையுடன் மன்னார்குடி ஆட்களுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 10ம் தேதி கொல்கத்தாவில் நடந்த பார்வர்ட் பிளாக்கின் தேசிய செயற்குழுவில் கலந்து கொள்ள கார்த்திக்குக்கு மட்டும்அழைப்பு அனுப்பப்பட்டது. சந்தானத்தை கட்சித் தலைமை கூப்பிடக் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+