தற்கொலை லட்சியத்தை நிறைவேற்றிய எஸ்.ஐ

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவைகுண்டம்:

தற்கொலை செய்வதே எனது லட்சியம் என்று கூறி வந்த, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையசப்-இன்ஸ்பெக்டர் லட்சம், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சம். இவரது மனைவி லதா. இவர்களுக்கு லக்சிகா, லக்சனா என இருமகள்கள் உள்ளனர். தனது வாழ்க்கையின் முக்கிய லட்சியமே தற்கொலை செய்து கொள்வதுதான் பல காலமாகவே கூறிவந்துள்ளார் லட்சம்.

ஆரம்பத்தில், இவர் ஏதோ உளறுகிறார் என்று விட்டுவிட்டனர். ஆனால், சொன்னதை செய்யும் விதமாக பலமுறை தற்கொலைக்குமுயன்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் ஆட்வைஸ் தந்தனர்.

ஆனால், தனது தற்கொலை முயற்சிகளை அவர் தொடர்ந்தார். எட்டயபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தபோது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். அப்போது கயிறு அறுந்ததால் கீழே விழுந்து உயிர் பிழைத்தார்.

பின்னர் லதாவின் தூத்துக்குடி வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றார். அப்போது லதா அவரைக் காப்பாற்றி விட்டார்.

பின்னர் அவர் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டிக்கு மாற்றப்பட்டார். அங்கு உயர் அதிகாரிகளுடன் தகராறு ஏற்பட்டுதூத்துக்குடி காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 9ம் தேதி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். பணியில் சேர்ந்த அவரை லதாவும், 2 மகள்களும்ஞாயிற்றுக்கிழமை காலை, தூத்துக்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வந்து பார்த்தனர். பின்னர் குடும்பத்தோடு, ஸ்ரீவைகுண்டம்பகுதியை சுற்றிக் காட்டிய லட்சம், காவல் நிலையம் திரும்பினார். லதாவும், குழந்தைகளும் ஊர் திரும்பினர்.

மதியம் சாப்பிட்டு விட்டு தனது அறையில் லட்சம் ஓய்வெடுத்தார். காவல் நிலையத்தில் சுடலைமுத்து என்ற காவலர் மட்டுமேஇருந்தார். சிறிது நேரத்தில் லட்சம் இருந்த அறையிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால், சுடலை முத்து என்னவென்று ஓடிப்போய் பார்த்துள்ளார்.

அங்கு, லட்சம் தனது துப்பாக்கியால் தானே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்தார்.

நெல்லை டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்து லட்சம்தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொள்வதே தனது லட்சியம் என்று கூறி வந்த லட்சம், கடைசியில் தனது லட்சியத்தில் வெற்றி பெற்று விட்டார்,ஆனால் வாழ்க்கையில் தோற்று விட்டார்.

இப்படிப்பட்ட விசித்திரமான மனோநிலை கொண்டவர்களை எல்லாம் தமிழக காவல் துறை ஏன் பணியில் வைத்துள்ளது என்றுதெரியவில்லை. ஒருமுறை தற்கொலைக்கு முயன்றபோதே அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் அல்லது மன நல பயிற்சிஅளித்திருக்க வேண்டும். அது எதையும் காவல்துறை செய்யவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+