திமுகவில் அதிருப்தி: சரத்துக்கு அதிமுக வலை

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

நடிகர் சரத்குமாருக்கு அதிமுக வலை வீசி வருவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் கும்பகோணத்தில் பேட்டியளித்த சரத்குமாரின் பேச்சு அவர் திமுகவில் பெரும் அதிருப்தியுடன் இருப்பதைதெள்ளத் தெளிவாக உணர்த்தியது.

அவர் கூறுகையில்,

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த 13 மந்திரிகள் உள்ளனர். இருப்பினும் சமீபத்தில் மந்திரி சபை மாற்றம்செய்யப்பட்டபோது கூட நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என அச் சமுதாயத்தினர் இடையே என்றஆதங்கம் உள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் அச் சமுதாயத்தினர் மனு கொடுத்துள்ளனர்.

வரும் மார்ச் மாதம் திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டில் அதிக நேரம் கலந்து கொள்ள முடியாது என்று கருதுகிறேன். எனக்குதொடர்ந்து படப்பிடிப்புகள் உள்ளன.

என் நற்பணி மன்றக் கூட்டங்களில் திமுக கொடியைக் காணவில்லை என பலர் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். எனது மன்றத்தில்பல கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

டெல்லியில் நடிகர் விஜய்யை வைத்து அமைச்சர் தயாநிதி மாறன் நடத்திய ஸ்டாம்ப் வெளியீட்டு விழாவில் பங்கேற்க எனக்குஅழைப்பு அனுப்பப்படவில்லை. இது எனது ரசிகர்களை ஆதங்கப்படுத்தியுள்ளது நியாயமானது தான் என்றார் சரத்குமார்.

சரத்குமாரை அதிமுகவுக்கு இழுக்க நடிகர் ராதா ரவி மூலமாக முயற்சிகளை போயஸ் கார்டன் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும்நிலையில் குமாரின் இந்தப் பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் திமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை என பல்வேறுநாடார் அமைப்புகளும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பதவியை சரத்குமார் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் இருந்து தான் சரத்குமார்திமுகவுக்கு வந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+