பெங்களூரில் விடுதலை புலிகள்: சுவாமி அலறல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெங்களூரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் அவர்கள் மீது புதிய கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
கொஞ்ச காலமாக காணாமல் போயிருந்த சு.சுவாமி தேர்தல் வருவதையொட்டி மீண்டும் தமிழகத்தில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார்.சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
பெங்களூரில் ஏராளமான விடுதலைப் புலிகள் பதுங்கியுள்ளனர். மிகவும் பாதுகாப்பான இடமாக அவர்களுக்கு பெங்களூர் திகழ்கிறது. இதை கர்நாடக அரசு அனுமதிக்கக் கூடாது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களைக் கைது செய்து தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். முந்தைய காங்கிரஸ் அரசு விடுதலைப் புலிகளை கண்டுகொள்ளவில்லை. ஆனால் புதிய கர்நாடக அரசு இதை அனுமதிக்கக் கூடாது என்று அலறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications