முத்துலட்சுமி வழக்கு: உயர்நீதிமன்றம் புது உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க நிநயமிக்கப்பட்ட அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்குநிவாரணம் வழங்குவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகுமாறு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்குசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிரடிப் படையினரன் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசுக்குஉத்தரவிடக் கோரி முத்துலட்சுமி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,
இந்தப் பிரச்சினையில் தேசிய மனித உரிமை ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். எனவே உரிய நிவாரணம் பெற மனிதஉரிமை ஆணையத்தை மனுதாரர் அணுக வேண்டும் என்று உத்தரவிட்டு மனுவைப் பைசல் செய்தனர்.












Click it and Unblock the Notifications