ஜோடிகளை தடுக்க கோடிகள்: கருணாநிதி
சென்னை:
அரசியலில் (திமுக-மதிமுக) ஜோடி சேருவதைத் தடுக்க கோடிகளை வைத்துக் கொண்டு சிலர் (அதிமுக) முயற்சி செய்து வருவதாகதிமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
முத்தமிழ்ப் பேரவையின் சார்பில் இயல், இயல், நாடகத் துறைகளில் சிறந்த சேவை செய்த கலைஞர்களைப் பாராட்டி மைலாப்பூர்பாரதீய வித்யா பவன் கலையரங்கில் நிகழ்ச்சி நடந்தது.அதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு ராஜ ரத்தினா விருதை கீழ்வேளூர் கணேசனுக்கும், இயல் செல்வம் விருதைநிர்மலா சுரேசுக்கும், நாட்டியச் செல்வம் விருதை அருணா சாய்ராமுக்கும், தவில் செல்வம் விருதை ஷேபனா ரமேசுக்கும், மிருதங்கவிருதை கும்பகோணம் பத்மநாபனுக்கும் வழங்கினார்.
பின்னர் கருணாநிதி பேசுகையில்,
நான் நூறாண்டு வாழ வேண்டும் என அருணா சாய்ராம் பேசினார். அதை நான் வாழ்த்தாகக் கருதவில்லை. சாபம்கொடுத்ததாகவே நினைக்கிறேன். இந்த மேடையில் எத்தனையோ, கலைஞர்கள், அறிஞர்கள், வித்தகர்களை 30 ஆண்டு காலமாகசந்திக்கும் வாய்ப்பைப் பெற்று மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அவர்களில் பலர் இன்றைக்கு இங்கே இல்லை.
மகா மேதைகளான பிச்சையப்பா, சுப்பிரமணிய பிள்ளை, ராமையா பிள்ளை போன்றவர்கள் இந்த மாமன்றத்தில் என்னைப்பாராட்டிய காட்சிகள் என் மனக் கண்ணில் திரைப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனால் தான் நூறாண்டு காலம் வாழ்ந்து அத்தகைய நிகழ்ச்சிகளை எல்லாம் என் நெஞ்சில் தாங்கும் சக்தி எனக்கு இருக்கிறதா?என்ற காரணத்தால் தான் நான் அதை வாழ்த்தாகக் கருதவில்லை என்றேன்.
மன்மோகன் சிங் பிரதமர் ஆன பிறகு சோனியா காந்தியின் வழிகாட்டுதலால் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது.அது என்னால் அல்ல, பிரதமரால் மட்டுமல்ல, உங்களால் கிடைத்திருக்கிறது.
அந்த காரியத்தைச் செய்ய யாரை எங்கே அனுப்ப வேண்டுமே, அவர்களை அங்கே அனுப்பி வைத்தீர்கள். இதனால் தான் உங்கள்வேலைக்காரர்களாக, ஊழியர்களாக இருந்து, பணியாளர்களாக இருந்து தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக் காட்டினோம்.
இந்த விழாவில் கவிஞர் வாலி, காதலர் தினக் கவிதை படித்தார். அதில் அரசியுலம் தலை நீட்டியது. எனக்கு அச்சம் தான். வாலிதனக்குப் பட்டதை சொல்லிவிட்டார். நான் பட்டதையெல்லாம் சொல்ல வேண்டாமா? ஆனால், நான் சொல்ல வேண்டிய இடம்இந்த மன்றம் அல்ல. அது வேறு மைதானம்.
நான் அண்ணாவின் மொழிப்படி, வாலி சொன்னது போல, எதையும் தாங்கும் இதயத்தோடு எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுமுகாரியை வெளிக் காட்டாமல், பைரவியாக இருக்கிறேன். தோடியா இருக்கிறேன். (இவையெல்லாம் ராகங்களின் பெயர்கள்).
தோடி என்று சொல்லுகின்ற நேரத்தில் ஜோடி பற்றிச் சொல்ல வேண்டும். அரசியலில் ஜோடி என்று கேட்டால், உங்களுக்கெல்லாம்தெரியும். சிலர் ஜோடிகளை சேர விடாமல் தடுக்க கோடிகளை வைத்துக் கொண்டு முனைகிறார்கள்.
நாம் ஜோடி சேர்ந்தாலும் சேராவிட்டாலும், கோடிகளை வைத்துக் கொண்டு எதையும் செய்யலாம் என்று எண்ணுகிறவர்களைவிரட்டாத பேடிகளாக மாத்திரம் இருக்க மாட்டோம் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
ஏனென்றால், தமிழ்நாட்டில் மொழியை, உரிமையைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்தக் கடமையை நாம்செய்தாக வேண்டும் என்றார்.
முன்னதாக வாலி பேசுகையில் கருணாநிதியின் அருகே அமர்ந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனை சுட்டிக் காட்டி,கருணாநிதியின் கை அருகே கை உள்ளது. பம்பரம் (மதிமுக) உங்கள் பை அருகே உள்ளது. மாம்பழம் (பாமக) உங்கள் மடியில்ள்ளது. சொங்கொடிகள் (இடதுசாரிகள்) உங்கள் அன்புப் பிடியில் உள்ளன. ஆகவே இந்தக் கூட்டணி உடையாது.
கருணாநிதி மீண்டும் முதல்வராவது உறுதி. வைகோ வேறு அணிக்குப் போய்விடுவார் என சில ஏடுகள் சொல்வது உண்மையல்ல,அவை வெறும் சைகோ தகவல்கள் என்றார்.
நிகழ்ச்சியில் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்எம் வீரப்பன், ஸ்டாலின், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும்குடும்பத்தினர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications