பெங்களூர் ஜோடியின் கடல் கல்யாணம்
பாண்டிச்சேரி:
![]() |
காதலர் தினத்தன்று, பெங்களூரைச் சேர்ந்த காதலர்கள் அபிலாஷ், லட்சுமி ஆகியோர் பாண்டிச்சேரிக்கு வந்து நடுக் கடலில் திருமணம் செய்து கொண்டனர்.
பெங்களூரைச் சேர்ந்த தனியார் வங்கியில் பணிபுரிபவர் அபிலாஷ். இவருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதல் மலர்ந்து, மணம் வீசி வந்தது.
திருமணம் குறித்து யோசித்த இருவரும், வித்தியாசமான முறையில் அதைச் செய்து முடிவெடுத்தனர்.
இதையடுத்து நடுக்கடலில் வைத்து கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர். எங்கு போய் செய்யலாம் என்று யோசித்த போது புதுவை அவர்களது நினைவுக்கு வந்தது.
இதையடுத்து நண்பர்களுடன் 2 நாட்களுக்கு முன்பு புதுவை வந்து ஆரோவில் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கினர். காதலர் தினமான நேற்று புதுவை பழைய துறைமுகத்துக்கு வந்தனர். அங்கு புதுவை அரசின் சுற்றுலாக் கழக படகு ஒன்றை வாடகைக்கு எடுத்தனர்.
பின்னர் அந்தப் படகில் புரோகிதர், நண்பர்கள், திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் சகிதம் நடுக்கடலுக்கு சென்றது அபிலாஷ்-லட்சுமி ஜோடி.
கடலுக்குள் சென்றதும் புரோகிதர் திருமணத்திற்கான மந்திரங்களை ஓதி படகிலேயே சிறியதாய் யாகம் வளர்த்தார். பின்னர் நண்பர்கள், சுற்றுலாக் கழக ஊழியர்கள் முன்னிலையில் லட்சுமி கழுத்தில் அபிலாஷ் தாலி கட்டினார். பின்னர் இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டனர்.
இன்னும் இருவரும் அவர்களது பெற்றோரிடம் தங்களது காதலைச் சொல்லவில்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். இருப்பினும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட எங்களை இருவரது பெற்றோரும் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களது ஆசியும் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் அபிலாஷ்.
வாழ்க வளமுடன்...













Click it and Unblock the Notifications