தமிழ்த்தாய் விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் செயல்படும் சிறந்த தமிழ் அமைப்புக்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பல மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தங்களது பண்பாட்டு வேர்களை காப்பதற்காக பல்வேறு அமைப்புகளை உருவாக்கி, மொழி, இலக்கியம், கலை ஆகியவற்றை போற்றி வருகின்றனர்.

அவர்களது பணிகளுக்கு ஆதரவளிக்கவும், ஊக்குவிப்பாக அமையவும், சிறப்பாக செயல்படும் தமிழ் அமைப்புக்கு ரூ. 5 லட்சம் பரிசுடன் தமிழ்த் தாய் விருது வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள பதிவு செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பிப்ரவரி 28ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப மனுவை, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ்வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், ஹால்ஸ் சாலை, சென்னை -8 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+