ஆகாசவாணி திமுக!: பாஜக கிண்டல்!!
சென்னை:
ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை அகில இந்திய வானொலியில் செய்தி வருவது போல தங்களது கூட்டணி கட்டுக் கோப்பாக உள்ளது என்று அடிக்கடி கூறும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளதாக அகில இந்திய பாஜக துணைத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல. கணேசன் பேசுகையில், திமுகவினர் கூட்டணிப் பிரச்சினையால் பெரிதும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.அகில இந்திய வானொலியில் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுற ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது என்று கூறுவது போல, நீங்கள் பார்த்தக் கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை என்று அடிக்கடி கூறுவது போல, திமுக கூட்டணி கட்டுக் கோப்பாக உள்ளது என்று அடிக்கடி கூறும் கட்டாயத்திற்கு திமுகவினர் தள்ளப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுவதே இதற்குக் காரணம். இது அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது. அங்குள்ள பல கட்சிகள் எப்போது வெளியேறலாம் என்று காத்துக் கொண்டுள்ளன.
தமிழகத்தில் நடைபெறும் மத்திய அரசு விழாக்கள் குறித்து பத்திரிகைகளில் பெருமளவில் பணத்தை வீணடித்து செலவு செய்கிறார்கள். மேலும் திமுகவினரும், கூட்டணிக் கட்சியினருமே அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள்.
மாநில அரசு இதில் புறக்கணிக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தை எடுத்து தேர்தல் லாபத்திற்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கட்சி என்று வாய் கிழியப் பேசி வந்தது. ஆனால் இன்று ராணுவத்தில் எத்தனை முஸ்லீம்கள் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது என்ற கணேசன் அதிமுக குறித்து மூச் காட்டவில்லை.
அப்ப என்ன அர்த்தம்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications