கருணைக் கொலையிலிருந்து தப்புவானா திண்டுக்கல் சிறுவன்?
சென்னை:
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் சூர்யா பிரபாகரனை கருணைக் கொலை செய்யக் கோரிதிண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்த முத்துப் பாண்டி என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவின் எதிரொலியாக மருத்துவ ரீதியாக சூர்யா பிரபாகரனுக்கு உதவ வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி. முத்து தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.பொருளாதார ரீதியாக மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் முத்துப் பாண்டிக்கு, தனலட்சுமி என்ற மனைவிஇருந்தார். இவர் ரத்த சோகை காரணமாக ஏற்கனவே இறந்து விட்டார். இதுதவிர சூர்யா பிரபாகரன் (வயது 15)என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.சூர்யா பிரபாகரனுக்கும் ரத்த சோகை உள்ளது. மேலும், ரத்தம் உறையாமை பிரச்சினையும் கடந்த 10 ஆண்டுகளாகஉள்ளன. இதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறான் சூர்யா. சிகிச்சைக்காக பெங்களூர், சென்னை, மதுரைஉள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மகனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தார் முத்து. இருப்பினும் நாளுக்குநாள் சூர்யாவின் நிலை மோசமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு மேல் செலவழித்து சிகிச்சை செய்யமுத்துவிடமும் பண வசதி இல்லை.
மேலும், உடலில் வெட்டுக் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காயம் ஏதும் ஏற்பட்டால் ரத்தம்தொடர்ந்து நிற்காமல் வெளியேறும், உயிருக்கே ஆபத்தாக அது முடியும் என்பதால் சூர்யாவைக் கண்ணும்கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் முத்துப் பாண்டியின் குடும்பம் உள்ளது. மேலும், ரத்தசோகைக்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் வேண்டியுள்ளது.
இதனால் என்ன செய்வது என்று புரியாமல், தனது மகனை கருணைக் கொலை செய்ய முத்து முடிவெடுத்தார்.இதையடுத்து சூர்யா பிரபாகரனை கருணைக் கொலை செய்து தன்னிடம் உடலை ஒப்படைக்குமாறு கோரிதிண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். இது தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் கொடுமை என்னவென்றால், கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை சூர்யா பிரபாகரனே தனது கைப்படஎழுதியுள்ளான். முத்துவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் சூர்யாவே கருணைக் கொலைக்கான மனுவைஎழுதியுள்ளான்.
முத்துப் பாண்டியின் நிலையை அறிந்த, பிரபல வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிக் கரம்நீட்டியுள்ளது. ரத்த சோகைக்கான சிகிச்சையில், தெற்காசியாவிலேயே மிகவும் பிரபலமான மருத்துவமனை இதுஎன்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைத் தரவும், சிறந்த சிகிச்சை அளிக்கவும்தாங்கள் தயாராக இருப்பதாக வேலூர் மருத்துவமனை அறிவித்துள்ளது.
இதன் மூலம் சூர்யாவின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும், அவனது கருணைக் கொலை தவிர்க்கப்படும் என்றநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications