தர்மபுரி பஸ் எரிப்பு-கருத்து கார்த்தி அழைப்பு
மதுராந்தகம்:
அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ள ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவர்கள் புரட்சி செய்யவேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், கருத்து அமைப்பின் நிறுவனருமான கார்த்தி சிதம்பரம்அழைப்பு விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கொளப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள கற்பகவிநாயகர் பொறியியல்கலலூரியில் மேலாண்மைத் துறை மாணவர் மன்றத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், சினிமாபடங்களைப் பார்த்து விசிலடிக்கவே மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். சுய மரியாதை சற்றும் இல்லாமல்வாழும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர்.இந்தியாவை மாற்றி விடலாம், உலகையே மாற்றி விடலாம் என்று மாணவர்கள் வீர வசனம் பேசுகிறார்கள். பேச்சுப்போட்டிக்காக இவ்வாறு பேசி விட்டுச் செல்லலாம். ஆனார் தர்மபுரியில் 3 மாணவிகள் உயிரோடுஎரிக்கப்பட்டபோதும், சென்னை சட்டக் கல்லூரியில் போலீஸார் அத்துமீறி நுழைந்து மாணவர்களை அடித்தநொறுக்கியபோதும் மற்ற மாணவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் கொந்தளிக்கவில்லையே! யாரும் எந்தகலாட்டாவும் செய்யவில்லை.
1960ம் ஆண்டுக்குப் பிறகு மாணவ சமுதாயம் தூங்கத் தொடங்கியது. இன்னும் தூங்கிக் கொண்டுதான் உள்ளது.யார் உங்கள் மீது என்ன இழி சொல் சொன்னாலும், பழி சுமத்தினாலும் நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள்.உங்களிடம் பலம் உள்ளது என்று நீங்கள் சொன்னால் அதை நான் நம்ப மாட்டேன்.
அப்படியே உங்களிடம் பலம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், முதலில் அண்ணா பல்கலைக்கழகம்சுமத்தியுள்ள ஆடைக் கட்டுப்பாட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்துங்கள். துணைவேந்தரின் அடக்குமுறைசட்டத்தை மீறுங்கள். அந்த தைரியம் என்றைக்கு உங்களுக்கு வருகிறதோ, அப்போதுதான் உங்களிடம் வலிமைஇருக்கிறது என்பதை நான் நம்புவேன் என்றார் கார்த்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications