திமுகவிடம் மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூ பட்டியல்
சென்னை:
தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன், தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் சென்று கருணாநிதியை சந்தித்து தாங்கள் போட்டியிடும் தொகுகளின் பட்டியலை வழங்கினர்.பின்னர் வெளியே வந்த வரதராஜனிடம், எத்தனை தொகுதிகள் என்று கேட்டபோது, அதுபற்றி இப்போது வெளிப்படையாக கூற முடியாது என்றார்.
இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொகுதிப் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருணாநிதியை நாளை சந்தித்து பட்டியல் தரவுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தான் கடைசியாக பட்டியல் தரவுள்ளது. காரணம், அதிலுள்ள கோஷ்டி பிரச்சனை. இதனால் பட்டியல் டெல்லியில் தான் முடிவாக உள்ளது.
தொகுதிகள் குறித்து முடிவு செய்ய கிருஷ்ணசாமியை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா அழைத்துள்ளார்.இதையடுத்து அவர் இன்று ஒரு பட்டியலுடன் டெல்லி விரைகிறார்.
கடந்த 3 நாட்களாக பல்வேறு கோஷ்டிகளின் தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டும், விரும்பும்தொகுதிகளை குறிப்பிட்டும் மனுக்கள் கொடுத்தன. அத்தோடு தனது ஆட்களின் லிஸ்டையும் சேர்த்து சோனியாவிடம் தரவுள்ளார்கிருஷ்ணசாமி. இதையடுத்து வாசனிடம் பேசி லிஸ்டை சோனியா இறுதி செய்யவுள்ளார்.
பின்னர் அந்தப் பட்டியலை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, 25ம் தேதி கருணாநிதியிடம் வழங்கவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications