மீண்டும் போலி: வந்தது தேர்தல் ஆணைய குழு
சென்னை:
தேர்தல் ஆணையத்தின் கடும் நடவடிக்கை, உத்தரவுகளுக்குப் பின்னரும் தமிழகத்தில் மீண்டும் லட்சக்கணக்கில் போலிவாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டத்திலும், அமைச்சர் ஓ.பியின் தொகுதியான பெரியகுளத்திலும் போலி வாக்காளர்கள் ஏகப்பட்டஅளவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க் கட்சிகள் புகார்களை அனுப்பியபடி உள்ளன. இதையடுத்து புதியவாக்காளர்களைச் சேர்ப்பதை மேற்பார்வையிட 5 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை மத்திய தேர்தல் ஆணையம் அவசரமாகதமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
கே.ஆர். பிரசாத், மஜூம்தார், பர், படோலியா, வீரேந்திரகுமார் ஆகிய அதிகாரிகள் குழு இன்று அவசரமாக தமிழகம் வந்துசேர்ந்தது. இந்தக் குழு மூன்று பிரிவாக சென்னை, கோவை, கன்னியாகுமரி சென்று மனுக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இவர்கள் 30 மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தவுள்ளனர். பின்னர் முறைகேடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குஅறிக்கை தருவர்.
சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள், தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள்,டிஜிபிக்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தபோது இந்த போலி வாக்காளர்கள் விவகாரமும் விவாதிக்கப்பட்டதாகத்தெரிகிறது.
இக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, தலைமைச் செயலாளர் நாராயணன், உள்துறைச்செயலாளர் பவன் ரெய்னா, டிஜிபி அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைதுசெய்யப்படாமல் இருக்கும் கிரிமினல்களை உடனே கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு தலைைமத் தேர்தல் ஆணையர்டாண்டன் உத்தரவிட்டார்.
மேலும் எந்தவிதமாக குற்றச்சாட்டிலும் சிக்காத காவல்துறையினரைத் தான் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும், முறைகேடுசெய்த அதிகாரிகளை தேர்தல் பணியில் நியமிக்கக் கூடாது, தேர்தலை நடுநிலையுடன் ஒழுங்காக நடத்தி முடிக்க வேண்டும்என்றும் உத்தரவிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் 13 லட்சம் போலி வாக்காளர்களை அதிமுக அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும்அவர்களுக்குப் போட்டியாக திமுகவினரும் சேர்த்ததும், அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து வருவதும்குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications