தீச்சட்டி தூக்கும் வளர்மதி-தேர் இழுத்த முரளி
சென்னை:
நாளை முதல்வர் ஜெயலலிதாவின் 58வது பிறந்த நாளையொட்டி அதிமுகவைச் சேர்ந்த நடிகர்கள் சென்னைதுறைமுகம் பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் தேர் இழுத்தனர்.
நாடக நடிகர் எஸ்.வி.சேகர், அதிமுகவில் 3வது முறையாக சேர்ந்த விஜய்குமார், நடிகர் விஜய்குமார், சமீபத்தில்கட்சியில் சேர்ந்த நடிகர் முரளி, ராதாரவி ஆகியோர் வெள்ளித் தேர் இழுத்தனர்.இந் நிகழ்ச்சிக்கு வட சென்னை மாவட்டச் செயலாளர் சேகர்பாபு தலைமை தாங்கினார். அதிமுக கொ.ப.செ.மணியனும் கலந்து கொண்டார்.
சிறப்புப் பூஜைகளை நடத்திய அதிமுகவினர் 538 பேருக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கினர். ஜெவுக்குஇப்போது ராசியான எண் ஏழாம்.. இதனால் 7 கூட்டுத் தொகை வருவது போல வேட்டி, சேலை வழங்கினர்.
காளியம்மன் கோவிலில் வளர்மதி:
அதே போல சைதாப்பேட்டை காளியம்மன் கோவிலில் ஜெயலலிதாவுக்காக அமைச்சர் வளர்மதி விசேஷ பூஜைநடத்தினார்.
நாளை மகளிர் சுய உதவிக் குழுவினருடன் வளர்மதி கேக் வெட்டப் போகிறாராம். மேலும் 15 நாட்களாக விரதம்இருக்கும் அவர் தீச் சட்டியும் எடுக்கப் போகிறார். நாளை கே.கே. நகர் மருத்துவமனையில் பிறக்கும்குழந்தைகளுக்கு வெள்ளிக் கொலுசு அணிவிக்க இருக்கிறார்.
மாங்காடு கோவிலில் பாலகங்கா:
அதே போல மத்திய சென்னை அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பாலகங்கா முன்னிலையில் மாங்காடுகாமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்புப் பூஜை நடந்தது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தங்கத் தேர் இழுத்தார்.












Click it and Unblock the Notifications