For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்- கட்டண உயர்வு இல்லை, ஏசி கட்டணம் குறைப்பு- தமிழகத்துக்கு புதிய ரயில்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

2006-07ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை இன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவர்நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதில், கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே பயணிகள் கட்டணத்தை இந்த ஆண்டும் லாலு உயர்த்தவில்லை.அதே போல சரக்குக் கட்டணத்தையும் உயர்த்தவில்லை.

அதே நேரத்தில் குறைந்த கட்டண விமான நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் ஏசி முதல் வகுப்புக்கட்டணம் 18 சதவீதமும், ஏசி இரண்டாம் வகுப்புக் கட்டணம் 10 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. ராஜதானி ரயில்கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல பெட்ரோல், டீசல் மீதான சரக்குக் கட்டணத்தை 8 சதவீதம் லாலு குறைத்துள்ளார். இதனால் அவற்றின்விலை உயர்வு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படும்.

ரயில்வேத்துறையின் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு செலவுகள் போக சுமார் ரூ. 11,000 கோடிஅளவுக்கு கூடுதல் நிதி (ஞிச்ண்ட ணூஞுண்ஞுணூதிஞு) உள்ளது. மிக கடந்த இரு ஆண்டுகளில் பல மடங்காகிவிட்ட சரக்குப்போக்குவரத்தால் இவ்வளவு நிதி குவிந்துள்ளது.

பட்ஜெட்டின் பிற முக்கிய அம்சங்கள்:

55 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

ரயில்வே கெளண்டர்களில் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் (இ-டிக்கெட்) டிக்கெட் பதிவுசெய்ய வசூலிக்கப்பட்ட வந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்புக்கு ரூ. 20ம் இரண்டாம் வகுப்பு முன்பதிவுக்கு ரூ. 15ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை இனி ஏஜெண்டுகள் மூலமும் வாங்கிக்கொள்ளலாம்.

அதே போல இனிமேல் எல்லா ரயில்களுக்கும் ஆன்-லைன் முன் பதிவு செய்யலாம். மேலும் டிக்கெட்டுகளைவழங்கும் 800 ஆட்டோமெட்டிக் டிக்கெட் இயந்திரங்களும் முக்கிய ரயில் நிலையங்களில் வைக்கப்படும். ரயில்டிக்கெட்டுகளை விற்க கிராமின் டிக்கெட் புக்கிங் சென்டர்கள் திறக்கப்படும்.

200 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றப்படும்.

அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ஏடிஎம்கள், சைபர் கபேக்கள் அமைக்கப்படும்.

சதாப்தி, ராஜதானி, சில மெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். அனைத்து ராஜதானி ரயில்களின் பயண நேரமும்ஒரு மணி நேரம் குறைக்கப்படும்.

ரயில்வேயில் காலியாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்கான 6,000 வேலை இடங்களை நிரப்பசிறப்பு ஆளெடுப்பு நடத்தப்படும்.

ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டடோருக்கான அதிபட்ச வயது வரம்புமேலும் ஒரு வருடம் அதிகரிக்கப்படும்.

ஏசி முதல் வகுப்புக் கட்டணம் 18 சதவீதமும், ஏசி இரண்டாம் வகுப்புக் கட்டணம் 10 சதவீதமும்குறைக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்ததூரம் (100) பயணம் செய்வோருக்கு கட்டணத்தில் 30 சதவீதம் வரைகுறைக்கப்பட்டுள்ளது. அதே போல ராஜதானி ரயில்களின் கட்டணமும் குறைந்தபட்சம் ரூ. 111ல் இருந்துஅதிகபட்சமாக ரூ. 1,598 வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ரயில்வேவுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 23,475 கோடியாகும்.

இந்த ஆண்டு ரயில்வே எதிர்பாக்கும் லாபம் ரூ. 14,293 கோடி.

விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் தொழிற் பயிற்சிக்காக பயணம் செய்யும்போது கட்டணத்தில் 50 சதவீதசலுகை அளிக்கப்படும்.

ஊனமுற்றவர்கள் கை, கால் மாற்று அறுவை சிகிச்சைக்காக பயணிக்கும்போது 50 சதவீத கட்டண சலுகைஅளிக்கப்படும்.

4 முக்கிய ரயில்கள் உலகத் தரமான ரயில்களாக மாற்றப்படும்.

கரீப் ரத் என்ற பெயரில் ஏசி மூன்றாம் வகுப்புப் பெட்டியின் டிக்கெடை விட விலை குறைவான 4 முழு ஏசிரயில்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்படும். இதில் ஒரு ரயில் சென்னையில் இருந்து டெல்லிக்குஇயக்கப்படும்.

ஆஜ்மீரில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய புனிதத் தலமான காஜா ஆஜ்மீர் ஷெரீபுக்கு பெங்களூர் (யஷ்வந்த்பூரில்இருந்து), ராஞ்சி, கஸன்காஞ்ச் ஆகிய இடங்களில் இருந்து மூன்று கரீப் நவாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள்இயக்கப்படும்.

டெல்லி-ஆக்ரா இடையே அறிமுகப்படுத்தப்பட்ட நாட்டின் அதிவேக ரயில் டெல்லி-கான்பூர்-லக்னெள வரைநீட்டிக்கப்படும்.

தமிழகத்துக்கான புதிய ரயில்கள் விவரம்:

சென்னை-டெல்லி கரீப் ரத் (ஏசி) வாரம் ஒருமுறை, பெங்களூர்-சென்னை-தர்பங்கா (பிகார்) எக்ஸ்பிரஸ்,சென்னை-மங்களூர் (வாரம் 3 முறை), சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (தினமும்), சென்னை-திருவனந்தபுரம்(வாரம் ஒருமுறை), சென்னை-கோயம்புத்தூர், மதுரை-திருப்பதி மனமாட் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒருமுறை),புவனேஸ்வர்-பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் (வாரம் ஒருமுறை), சென்னை-பிலாஸ்பூர் (வாரம் ஒரு முறை).

நீட்டிக்கப்பட்ட ரயில்கள்:

சென்னை-வாரணாசி கங்கா, காவேரி எக்ஸ்பிரஸ் பிகார் மாநிலம் சாப்ரா வரை நீட்டிக்கப்படுகிறது.

சென்னை-ஜெய்ப்பூர் பாஸஞ்சர் சாம்கர்க் வரை நீட்டிக்கப்படுகிறது.

ஜெய்ப்பூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் கோயம்புத்தூர் வரை நீட்டிக்கப்படும்.

மேலும் புதிய ரயில்கள்:

அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்தவுடன் இயக்கப்படவுள்ள ரயில்கள் விவரம்:

மதுரை-ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய ரயில் விடப்படும்.

திருச்சி-கும்பகோணம் பாஸஞ்சர் ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்படும்.

அதே போல மைசூர்-கும்பகோணம் எக்ஸ்பிரசும் மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யப்படும்.

திருச்சி-தஞ்சாவூர் பாஸஞ்சர் ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்படும்.

மதுரை-மானாமதுரை ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும்.

அதிகமாக இயக்கப்படவுள்ள ரயில்கள்:

இப்போது வாரம் இருமுறை இயக்கப்படும் சென்னை எழும்பூர்-தென்காசி இடையிலான பொதிகை எக்ஸ்பிரஸ்இனி வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும். அகல ரயில் பாதை பணிகள முடிவடைந்தவுடன் இந்த ரயில்செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X