For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேப்டனிடம் சீட் கேட்கும் மாஜி தயாரிப்பாளர்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் விஜயகாந்த்துக்கு ஆரம்ப காலத்தில் ஹீரோ வாய்ப்பு கொடுத்த முன்னாள் சினிமா தயாரிப்பாளர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ஒரு காலத்தில் கனகதுர்கா மூவிஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இவர் தயாரித்த படம்தான், நான் சூட்டிய மலர். இப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் விஜயகாந்த். 1984ம் ஆண்டு வந்த படம் அது.

விஜயகாந்த் ஹீரோவக நடித்த 8வது படம் அது.

நான் சூட்டிய மலர் மொத்தமாக தியேட்டர்களில் ஓடியது 16 நாட்கள்தான். நஷ்டம் பல லட்சம். இதனால் படத் தயாரிப்பு வேலைகளை மூட்டை கட்டி விட்டு சேலம் பக்கம் ஒதுங்கி விட்டார் கோவிந்தராஜ்.

இருந்தாலும் விஜயகாந்த்தின் ரசிகரமாக மாறி ரசிகர் மன்றத் தலைவராகவும் உயர்ந்தார்.

இப்போது, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரி விஜயகாந்த் கட்சியில் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

தனக்கு ஆரம்ப காலத்தில் ஹீரோ வாய்ப்பு கொடுத்த கோவிந்தராஜுக்கு எம்.எல்.ஏ. சீட் தருவாரா கேப்டன்?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X