ஜெனீவா ஒப்பந்தம்-ஜேவிபி, ஜேஎச்யூ நிராகரிப்பு
கொழும்பு:
ஜெனீவாவில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்டபோர் நிறுத்த நீட்டிப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை அரசுக்கு ஆதரவான ஜனதாவிமுக்தி பெரமுனா (ஜே.வி.பி), ஜாதிகா ஹெல உருமயா (ஜே.எச்.யூ) ஆகிய சிங்களஇனவாதக் கட்சிகள் நிராகரித்துள்ளன.
இலங்கையில் கேள்விக்குறியாகி இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும்தொடங்கியுள்ளது. சமீபத்தில் ஜெனீவாவில் நார்வே தூதுக்குழுவின் கடும் முயற்சியின்விளைவாக இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2 நாள்பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கர்ணா தரப்பினர் மற்றும் பல்வேறு போராளிஅமைப்புகளிடமிருந்துஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற முக்கியக்கோரிக்கையை விடுதலைப் புலிகள் வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் சிலநிபந்தனைகளுடன் போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு தரப்பினரும் இணைந்து கூட்டறிக்கையையும்வெளியிட்டனர்.
இந்த உடன்படிக்கைக்கு இலங்கை ஆளுங்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளஜே.வி.பி மற்றும் ஜே.எச்.யூ. ஆகிய இரு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி கூறுகையில்,
இலங்கையில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டிய அமைப்பு என்றால்முதலில் விடுதலைப் புலிகளிடமிருந்துதான் ஆயுதங்களைப் பறிக்க வேண்டும்.
ஜெனீவா பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இலங்கைஅரசைப் பாராட்டுகிறோம். ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பிந்தைய முடிவுகளைநாங்கள் எதிர்க்கிறோம். சரியான கோணத்தில் ஆரம்பித்த பேச்சுவார்த்தை தவறானமுடிவுகளுடன் நிறைவடைந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று பேச்சுவார்த்தைதொடங்கும் முன்பாக இலங்கை அரசின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதலைமை பிரதிநிதி நிமல் ஸ்ரீபாலா டி சில்வா தெரிவித்திருந்தார்.
ஆனால், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்முரண்பாடான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
நார்வே தூதுக்குழுவின் நிர்ப்பந்தங்களுக்கு அரசு அடி பணிந்து விட்டதையே இந்தகூட்டறிக்கை வெளிக்காட்டுகிறது. இந்த உடன்படிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்.
வருங்காலத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ள பேச்சுக்களின்போது இந்தத் தவறுதிருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என அக்கட்சியின் சார்பில்வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, புத்தத் துறவிகளின் ஜாதிகா ஹெல உருமயா கட்சியும் ஜெனீவாஒப்பந்தத்தை நிராகரித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக, கூட்டணிக் கட்சிகளுடன் அதிபர் ராஜபக்ஷேபேசுகையில், இலங்கையின் இறையான்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்குஇடையூறாக உள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் எனஉறுதியளித்திருந்தார்.
ஆனால் தற்போதைய ஜெனீவா கூட்டறிக்கை, கூட்டணிக் கட்சிகளுடன் செய்துகொண்ட உடன்பாட்டை மீறுவதாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ணா எதிர்ப்பு!:
விடுதலைப் புலிகளால் துரோகி என வர்ணிக்கப்படும் கர்ணர்வும், ஜெனீவாஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
எங்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்கும் நடவடிக்கையை நாங்கள் தீவிரமாகஎதிர்ப்போம். ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று யாரும் எங்களைநிர்ப்பந்திக்க முடியாது. எங்கள் சுய பாதுகாப்புக்காகவே நாங்கள் ஆயுதம்ஏந்தியுள்ளோம் என்று கர்ணா கூறியுள்ளார்.
ஒப்பந்தம் மீறல்: புலிகள் -ராணுவம் புகார்
இதற்கிடையே, ஜெனீவா ஒப்பந்தத்தை மீறும் வகையில் இலங்கை ராணுவம் நடந்துகொள்வதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் கூறுகையில், தமிழர்பகுதிகளில் செயல்படும் போராளி அமைப்புகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்கவேண்டும் என ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு காணப்பட்டது.
ஆனால் அது சிறிதளவு கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை.
டெல்ஃப்ட் தீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன்வாகனத்தில் மிகவும் சாதாரணமாக பயணம் செய்கின்றனர்.
ஆனால் இவர்களைத் தடுத்து நறுத்தி ஆயுதங்களைப் பறிக்க ராணுவம் நடவடிக்கைஎடுக்கவில்லை. மாறாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ள என்றார்.
அதேபோல விடுதலைப் புலிகளும் ஒப்பந்தத்தை மீறும் வகையில் நடந்துகொள்வதாக இலங்கை ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை ராணுவ அதிகாரி பிரிகேடியர் சுதிர் சமரசிங்கே கூறுகையில், ராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுறுவியுள்ளனர்.அவர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எங்களது ராணுவ முகாம்களுக்கு 300மீட்டர் தூரத்தில் புலிகள் பதுங்கு குழிகளை உருவாக்கி வருகிறார்கள்.
இது ஜெனிவா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். இதுதொடர்பாக போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் நாங்கள் புகார் கூறியுள்ளோம். புலிகளின்செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications