பாலாறு அணை-வேலூர் மாவட்டத்தில் கடையடைப்பு
வேலூர்:
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து வேலூர் மாவட்டம்முழுவதும் இன்று முழுக் கடையடைப்பு நடந்து வருகிறது.
சித்தூர் மாவட்டம் கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும்முயற்சிகளில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புஎழுந்துள்ளது.அணை கட்டும் முயற்சிகளை ஆந்திர அரசு கைவிடாவிட்டால் உச்சநீதிமன்றத்தில்வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வழக்கும்தொடரப்பட்டுள்ளது.
இருப்பினும், இது எங்களது உரிமை, இதை விட்டுக் கொடுக்க மாட்டோம்,அணையைக் கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது ஆந்திரஅரசு.
இந் நிலையில் ஆந்திர அரசைக் கண்டித்து வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில்பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன. இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவை சார்பில் முழுக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி வரை கடையடைப்பு நடக்கிறது.
கடையடைப்பு காரணமாக சிறு கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரைஅனைத்தும் மூடப்பட்டுள்ளன. வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவழக்கறிஞர்களும் இன்று நீதிமன்றப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஆற்காட்டில் வணிகர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டனப் பேரணியும் இன்றுநடைபெறுகிறது. கடையடைப்பு போராட்டத்தையொட்டி போலீஸார் பாதுகாப்புநடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications