போலி வாக்காளர்களை நீக்க சாப்ட்வேர் !
சென்னை:
ஒரே வாக்காளரின் பெயர் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க சாப்ட்வேரின்உதவியை நாடியுள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பையும் மீறி லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களைச் சேர்த்து திறமைகாட்டி வருகின்றன கரை வேட்டிகள். இந்த போலிகளை நீக்க பலவகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுதேர்தல் ஆணையம்.18 வயதுக்குக் குறைவான சிறுவர், சிறுமிகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, ஒரே வேட்பாளரை பலமுகவரிகள் கொடுத்து பல இடங்களில் பட்டியலில் சேர்ப்பது, செத்துப் போனவர்களின் பெயரில் யாரையாவதுசேர்ப்பது என பல இன்னோவேட்டிவான ஐடியாக்களை பயன்படுத்தி வருகின்றனர் கட்சியினர்.
இதில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவோ, அமைச்சர்கள், மாவட்டச் செயலளர்கள் மூலமாக அதிகாரிகளைமிரட்டி கத்தை, கத்தையாக வாக்காளர்களைச் சேர்த்தது. இவ்வாறு கொடுக்கப்பட்ட 19 லட்சம் மனுக்களில் 13லட்சம் மனுக்கள் போலியானவை என்ற கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டன.
இந் நிலையில் மீண்டும் 19 லட்சம் அளவுக்கு புதிய மனுக்கள் வந்துள்ளன. இதிலும் பாதிக்கும் மேற்பட்டவைஅதிமுகவினரால் சேர்க்கப்பட்ட போலி மனுக்கள் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இந்த போலிகளை நீக்க 6 அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது மத்திய தேர்தல் ஆணையம்.அவர்கள் ஆய்வு செய்து போலிகளை நீக்கி வருகின்றனர்.
இந் நிலையில் ஒரே வேட்பாளர் பல்வேறு முகவரிகளின் கீழ் சேர்க்கப்பட்டதை நீக்க சாப்ட்வேரைஉருவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த சாப்ட்வேர் உதவியுடன் போலிகளை நீக்கும் வேலைதொடங்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
இவர்கள் நீக்கப்பட்ட பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 7ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications