சிங்கப்பூர் நிறுவனத்துக்கு நிலம்: அரசு திடீர் பல்டி
சென்னை:
ஜெயலலிதாவின் ஊழல்கள் வரிசை, வரிசையாக அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள நிலத்தை, சிங்கப்பூரைச் சேர்ந்த தனியாருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்றதற்காக பெருமளவு பணம் கைமாறிய தகவல் வெளியானதால், இந்த வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது என்று தெரிந்து விட்டதால் சுதாரித்துக் கொண்டார் ஜெயலலிதா.
சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிப்காட் நிலத்தை சிங்கப்பூருக்கு விற்பதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.
மேலும், குறைந்த விலைக்கு விற்பதற்காக வாங்கிய ரூ. 125 கோடி பணத்தையும் திருப்பிக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
இதேபோல, சோழிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பு நிலத்தை மிக மிகக் குறைந்த விலைக்கு அஸெண்டாஸ் உள்ளிட்ட இரு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர்.
ஆனால் இந்த நில பேரத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரி மறுத்து விட்டு நீண்ட விடுப்பில் போய் விட்டார்.
இதேபோல விப்ரோ உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் அரசு நிலங்களை முறைகேடாக விற்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஜெயலலிதா ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள் தற்போது வரிசை வரிசையாக அணிவகுத்து வருகின்றன. இன்னும் எத்தனை ஊழல்கள் வரப் போகிறதோ என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications