தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய திடீர் தாக்குதலில், 6 படகுகள் சேதமடைந்தன.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 500 படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் வந்தனர்.தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவி என்பவரின் படகு உள்பட 6 விசைப் படகுகள் சேதமடைந்தன.
இதைத் தொடர்ந்து மற்ற மீனவர்கள் அங்கிருந்து தப்பி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த வெறித் தாக்குதலில் யாரும் காயம்அடையவில்லை.












Click it and Unblock the Notifications