புதுவை: 10 இடத்தில் தனித்து போட்டி-திருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் பாண்டிச்சேரியில் 10 இடங்களில் போட்டியிடமுடிவு செய்துள்ளது. மற்ற இடங்களில் அதிமுகவை ஆதரிக்கப் போவதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர்திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக-வி.சிறுத்தைகள் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகளைமுதல்வர் ஜெயலலிதா ஒதுக்கினார்.

தமிழக கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டபோதே பாண்டிச்சேரி குறித்தும் ஜெயலலிதாவிடம் பேச திருமாவளவன்முயன்றார். ஆனால், அங்கு வேறு சில கட்சிகளும் கூட்டணிக்கு வர உள்ளதாகவும் அதை அப்புறம் பேசலாம்என்று கூறி திருமாவை அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.

இந் நிலையில் ாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 10 இடங்களில் போட்டியிடப் போவதாகவும்மற்ற இடங்களில் அதிமுகவை ஆதரிக்கப் போவதாகவும் தடாலடியாக அறிவித்துள்ளார் திருமா.

இது குறித்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில்,

பாண்டிச்சேரியில் 5 இடங்கள் ரிசர்வ் தொகுதிகளிலும் 5 பொதுத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட முடிவுசெய்துள்ளோம். மற்ற இடங்களில் அதிமுகவை ஆதரிப்போம். அதே நேரத்தில் பண்டிச்சேரியிலும் கூட்டணிஅமைப்பது குறித்து அதிமுகவுடன் பேசவும் தயார்.

பாண்டியில் கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்பதை அதிமுக தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில்எங்களுக்கு ஜெயிக்கும் தொகுதிளை அதிமுக ஒதுக்கும் என்று நம்புகிறோம்.

நான் கடலூர் மாவட்டத்தில் தான் போட்டியிட உள்ளேன். தேர்தலில் போட்டியிட சீட் கோரி இதுவரை 170 பேர்விண்ணப்பம் அளித்துள்ளனர்.

மதிமுகவும் பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்திருமா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+