வீரப்பன் கொலை?: முத்துலட்சுமி மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சந்தனக் கடத்தல் வீரப்பன், தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஆனால் தனது கணவரை முன்பே விஷம் வைத்துக் கொன்று விட்டு, தாங்கள் சுட்டுக் கொன்றதாக அதிரடிப்படையினர் நாடகமாடுவதாக முத்துலட்சுமி புகார் கூறினார்.இந் நிலையில் தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்துலட்சுமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் ஆகியோர், இன்று மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணைக்கு விடும் அளவுக்கு இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications