• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

தொடங்கியது திருச்சி திமுக மாநாடு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திமுகவின் 9வது மாநில மாநாடு இன்று திருச்சியில் தொடங்கியது.

மாலை 3 மணிக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கூட்டணியை விட்டு யார் யார் கழன்று செல்லப் போகிறார்களோ என்ற டென்சனுக்கு இடையே மாநாடு நடக்கிறது.

புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் 5ம் தேதி வரை 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. தேர்தலுக்குத் தயாராகும் மாநாடு என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் திருச்சியில் குவிந்து வருகின்றனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

கிரானைட் கற்களால் ஆன பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் அமரும் வகையில் பிரமாண்ட பந்தலும் போடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் குவியும் தொண்டர்களுக்கு உணவு, நீர், தங்கும் வசதி, கழிப்பிட வசதிகள் பல கோடி செலவில் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடைக்கு பின்புறம் ஏசி வசதியுடனான குளு குளு குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன்கள், கார்கள், லாரி, ரயில், பஸ்களில் தொண்டர்கள் திருச்சியை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். திருச்சி நகரில் எங்கு நோக்கினும் திமுக கொடிகளும் தோரணங்களும் வரவேற்பு வளைவுகளுமாக உள்ளன.

சங்கம் ஹோட்டலில் தங்கியிருக்கும் கருணாநிதி இன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவரது தலைமையில் பொதுக்குழு கூடியது.

கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு, தேர்தல் யுத்திகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

மாலை 3 மணிக்கு மாநாட்டுத் திடலுக்கு கருணாநிதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அன்னப்பறவை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள ரதத்தில் அவர் அழைத்து வரப்பட்டார். 4 மணியளவில் மாநாட்டுத் திடலில் திமுக கொடியை ஏற்றி வைத்தார் கருணாநிதி. பொதுச் செயலாளர் அன்பழகன் மாநாட்டை துவக்கி வைத்தார்.

பின்னர் சுயமரியாதைச் சுடர் மாடத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி திறந்து வைத்தார். பின்னர் திமுக இளைஞர் அணியின் வெள்ளி விழா மாநாடு தொடங்கியது. முதல் நாள் மாநாட்டின் நிறைவாக ஸ்டாலின் பேசுகிறார்.

நாளை மாநாட்டில் கருணாநிதி தலைமை தாங்குகிறார். திமுக முன்னணித் தலைவர்கள் பேசுகிறார்கள். இரவில் அன்பழகன் சிறப்புரையாற்ற 2வது நாள் நிகழ்ச்சிகள் முடிவடையும்.

மாநாட்டுத் திடலில் கூட்டணிக் கட்சியினரின் கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நேற்று திடீரென வைகோவின் கட்-அவுட்டுகள், படங்கள் மட்டும் கழற்றப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலை தோழமைக் கட்சித் தலைவர்களான ஆர்.எம். வீரப்பன்,ஜவாஹிருல்லா, ராஜ. கண்ணப்பன், டாக்டர் சேதுராமன், அல்தாப், கு.செல்லமுத்து,எஸ்றா சற்குணம், பி.வி.கதிரவன், பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் பேசுகிறார்கள்.

மாலை 4 மணி முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் காதர் மொஹைதீன்,தா.பாண்டியன், என்.வரதராஜன், வைகோ, டாக்டர் ராமதாஸ், எம்.கிருஷ்ணசாமிபேசுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொகுதி உடன்பாட்டில் மதிமுகவும் இடதுசாரிகளும் இன்னும் திமுகவுடன்அண்டர்ஸ்டான்டிங்கை எட்ட முடியவில்லை. இதனால் வைகோ வருவாரா என்பதுசந்தேகமாகவே உள்ளது.

அன்றைய தினம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மாநாட்டில் பங்கேறுசிறப்புரையாற்றுகிறார். இறுதியாக திமுக தலைவர் கருணாநிதிநிறைவுரையாற்றுகிறார்.

கருணாநிதி தனது நிறைவுரையின்போது, சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள்போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த விவரத்தை வெளியிடத்திட்டமிட்டிருந்தார்.

மாநாடு முடிவதற்குள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துவிட்டால்அதை கருணாநிதி வெளியிடுவார். இல்லாவிட்டால் அந்த அறிவிப்பு வெளியாகாது.

இதற்கிடையே மாநாடு ஒரு பக்கம் நடந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்களை இறுதி செய்யும் பணியிலும், மதிமுக, இடதுசாரிகள் கூட்டணியை விட்டுப் போய்விடாமல் தடுக்கும் வேலைகளிலும் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஒவ்வொரு கூட்டணிக் கட்சியிடமும் ஆலோசனை நடத்த ஆட்களை நியமித்துவிட்டுத் தான் திருச்சிக்கே வந்தார் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X