அதிமுக கூட்டணிக்காக இன்னொரு கட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே இன்னொரு வன்னியர் கட்சிஉருவாகியுள்ளது. முன்பு பாமகவில் இருந்த தர்மபுரி மாஜி எம்பி பு.தா. இளங்கோவன்பாட்டாளி முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளார்.

வன்னியர் சங்க பொதுச் செயலாளர் பதவியிலும், பின்னர் பாமகவில் இணை பொதுச்செயலாளராகவும் இருந்தவர் பு.தா. இளங்கோவன். டாக்டர் ராமதாஸின்நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக திகழ்ந்தார்.

கடந்த 1999ம் ஆண்டு தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவருக்கு பாமக சீட்கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இளங்கோவன் பாமகவிலிருந்துவிலகினார். பாஜகவில் சேர்ந்து, போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தபு.தா.இளங்கோவனை அதிமுக தரப்பு தட்டி எழுப்பி புதிதாக ஒரு கட்சியைஉருவாக்கியுள்ளது.

பாட்டாளி முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் பு.தா. இளங்கோவன் புதுக் கட்சிஆரம்பித்துள்ளார். கட்சியின் கொடியாக மஞ்சள், பச்சை, சிவப்பு நிறக் கொடியைஇளங்கோவன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் சேர ஆர்வமாக இருப்பதாகவும், அழைப்பு வந்தவுடன்கூட்டணியில் சேருவோம் என்றும் இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இவர் அதிமுகவுடன் கூட்டு சேர கட்சி ஆரம்பிக்க இருப்பதை நாம் 2 வாரங்களுக்கேமுன்பே சொன்னோம்.

பாஜக சார்பில் எம்பி பதவிக்கு நின்றவராச்சே, இவர் இப்போது புதுக் கட்சிஆரம்பித்துவிட்டாரே என்று பாஜக தரப்பிடம் கேட்டால், அவர் எங்க கட்சியிலஉறுப்பினரே ஆகல என்று ஒரு பதில் தந்தார்கள்.

கட்சி உறுப்பினரே இல்லாதவருக்கு எம்பி தேர்தலில் சீட் தந்த ஒரே கட்சிபாஜகவாகத்தான் இருக்க முடியும்.

முடிவு குறித்து முடிவெடுக்க கூட்டம்:

இதற்கிடையே புதிய நீதிக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை காமராஜர்அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இக்கூட்டத்திற்கு சமீபத்தில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கல்லூரியைக் கட்டி, அந்தபிரச்சினை தொடர்பாக தலைமறைவாகி தற்போது மீண்டும் வெளியுலகில் நடமாடத்தொடங்கியுள்ள கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி (வேற யாரு,அதிமுகவே தான் என்பது ஏற்கனவே முடிவானது தான்) என்பது குறித்து முடிவெடுக்கஇக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாம்.

இன்னொரு கட்சி நியூஸ்:

முன்னாள் எம்.பியும், ஜனநாயக முன்னேற்றக் கழக தலைவருமான ஜெகத்ரட்சகனின்வீர வன்னியர் பேரவையில் புதிதாக 6 வன்னியர் அமைப்புகள் சேர்ந்துள்ளன.

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் வலது கரம் போலத் திகழ்ந்தவர்ஜெகத்ரட்சகன். முன்னாள் எம்.பியான இவருக்கு சொந்தமாக ஏராளமான கல்லூபிகள்சென்னையில் உள்ளன.

வன்னியரான ஜெகத்ரட்சகன், ராமதாஸுக்குப் போட்டியாக வன்னியர் தலைவராகும்முயற்சியில் படு தீவிரமாக இறங்கியுள்ளார்.

வீர வன்னியர் பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கியஜெகத்ரட்சகன், ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியையும்நடத்தி வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி சேர முயன்று வருவதாகத் தெரிகிறது.

வீர வன்னியர் பேரவையின் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் வன்னியர்நலச் சங்கம், வன்னியர் குல ஷ்த்திரிய சங்கம், வீர வன்னியர் சங்கம், வாழப்பாடியார்வன்னியர் சங்கம், வன்னியர் குல மகா சங்கம், வன்னியர் இளைஞர் சங்கம் ஆகியஅமைப்புகள் வீர வன்னியர் பேரவையில் தங்களை இணைத்துக் கொண்டன.

இந்தக் கூட்டத்தில், ஷத்திரிய வங்கி என்ற வங்கியும் தொடங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டது. இதில் முதல் முதலீட்டு நிதியாக ரூ. 51 லட்சத்துக்கானகாசோலையை ஜெகத்ரட்சகனிடம் ஜனநாயக முன்னேற்றக் கழக நிர்வாகிகள்பார்த்திபன், துரை ஆகியோர் வழங்கினர்.

வங்கிக்காக ரூ. 200 கோடி முதலீட்டை சேகரிக்க இந்த வங்கி திட்டமிட்டுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+