ரவுடிகளால் கற்பழிக்கப்பட்ட ஆதரவற்ற ஊமைப் பெண்ணுக்கு அபார்ஷன்: நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரவுடிகளால் கற்பழிக்கப்பட்ட, காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க சென்னைஉயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. 21 வயதான இவர் வாய் பேச முடியாத, காது கேளாத அனாதைப்பெண். சாலைகளில் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டி வந்தார். சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்.

இவரை அப் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் பலர் கற்பழித்து வந்துள்ளனர். இதில் முருகேஸ்வரி கர்ப்பமடைந்தார்.

ஆனால், கவனிக்க ஆளில்லாத இந்த அபலைப் பெண் கர்ப்பம் காரணமாக ஆங்காங்கே மயங்கி விழுந்தார்.இவரது பரிதாப நிலையைப் பார்த்த வழக்கறிஞர் ஜஸ்டின் மார்ஷல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், பிச்சை எடுத்து ஜீவனம் செய்ய வேண்டிய நிலையில் முருகேஸ்வரி உள்ளார். இந் நிலையில் அவர்கர்ப்பமடைந்துள்ளார். அதைக் கூட அவரால் உணர முடியாத அளவுக்குத்தான் அவரது மன வளர்ச்சி உள்ளது.

இதனால் அவரது வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அவரது கர்ப்பத்தைக் கலைத்து, அவருக்குமறுவாழ்வு அளிப்பதற்கான உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு கடந்த 2ம் தேதி தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்குவந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், முருகேஸ்வரியை சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறுசென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து முருகேஸ்வரியை சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் குழு பரிசோதித்தது. பின்னர்அவர்கள் தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதில் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான முழு உடல் தகுதியுடன் முருகேஸ்வரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் மீண்டும் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர்களின்அறிக்கையின்படி, தூத்தூக்குடி அரசு மருத்துவனையில் இன்னும் 6 வாரங்களுக்குள் முருகேஸ்வரிக்குகர்ப்பத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு முன் முருகேஸ்வரியின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

அபார்ஷன் செய்யப்பட்ட பின்னர் குழந்தையின் கரு பாதுகாக்கப்பட்டு சென்னையில் உள்ள தடயவியல்ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அங்கு கருவுக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். (கர்ப்பழித்தவனைக் கண்டறிய)அபார்ஷனுக்குப் பிறகு முருகேஸ்வரி உடல் நலம் தேறி விட்டால், தூத்துக்குயில் உள்ள ஏதாவது ஒருகாப்பகத்தில் அவரை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 20ம் தேதிக்குஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+