கொலை மிரட்டல் விடுத்த கார்த்தி சிதம்பரம்?
சென்னை:
நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் விடுத்ததாக சென்னை போலீசில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்,
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் இந்தப் புகாரைக் கொடுத்தார்.மேலும் மாநகர காவல்துறை ஆணையரையும் சந்தித்து கார்த்தி சிதம்பரம் தனக்குகொலை மிரட்டல் விடுத்துள்ளதால், தனக்கும், தனது குடும்பத்துக்கும் பாதுகாப்புதருமாறு கோரியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரமேஷ் கூறுகையில்,
நான் ப.சிதம்பரம் முன்பு நடத்தி வந்த காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின்திருவொற்றியூர் நகரச் செயலாளராக இருந்தேன். பின்னர் கட்சியைக் கலைத்து விட்டுசிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார்.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணியளவில் எம்.பி.நாதன் என்றஎனது நண்பர் என்னை சந்தித்தார். என்னிடம் கார்த்தி சிதம்பரம் பேச விரும்புவதாகக்கூறினார்.
இதைத் தொடர்ந்து அவரது செல்போனில் கார்த்தி சிதம்பரம் பேசினார். நான்கார்த்தியுடன் பேசினேன்.
அப்போது கார்த்தி சிதம்பரம், நீ அதிமகவில் சேரப் போவதாக ஜெயா டிவியில் பேட்டிகொடுக்கிறாயா? உன்னையும், குடும்பத்தையும் தொலைத்து விடுவேன் என்று சுமார் 8நிமிட நேரம் மிரட்டல் விடுத்துப் பேசினார்.
என்னை அவர் பேசவே விடவில்லை. என்னையும், எனது குடும்பத்தாரையும்ரொம்பக் கேவலமாகவும், ஆபாசமாகவும் திட்டினார். இதைத் தொடர்ந்துதிருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன்.
போலீஸார் புகாரைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கார்த்தி சிதம்பரத்தால், ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனவே போலீஸ் பாதுகாப்பு கோரி ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன்.
கார்த்தி சிதம்பரம் எனக்கு நல்ல நிண்பர்தான். என்னை மட்டும் திட்டியிருந்தால்பேசாமல் விட்டிருப்பேன். ஆனால் எனது குடும்பத்தை கேவலமாக திட்டியதைஎன்னால் பொறுக்க முடியவில்லை என்றார் ரமேஷ்பாபு.
ரமேஷ் பாபுவின் இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் புகாரை மறுக்கும் கார்த்தி தரப்பு, இதன் பின்னணியில் அதிமுக இருப்பதாகக்கூறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications