தென்மாவட்ட கோவில்களுக்கு குண்டு மிரட்டல்!
திருநெல்வேலி:
தென்கோடி மாவட்டங்களில் உள்ள 3 முக்கியக் கோவில்களான நெல்லையப்பர்கோவில், தென்காசி காசுவிசுவநாதர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில்ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரைக்கு மீனாட்சி, காஞ்சிக்கு காமாட்சி என்பது போல நெல்லையில் பிரசித்திபெற்ற கோவில் நெல்லையப்பர் கோவில். அதேபோல தென்காசியில் உள்ளகாசிவிசுவநாதர் கோவிலும் பிரசித்தி பெற்ற பழமையான கோவில்.இக்கோவிலை வைத்துத்தான் இந்த ஊருக்கே தென்காசி என்ற பெயர் வந்தது.அதேபோல திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளுள் ஒன்று.
இந்த மூன்று கோவில்களுக்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.நெல்லையப்பர் கோவில் நிர்வாக அதிகாரிக்கு வந்த மிரட்டல் கடிதத்தில்,நெல்லையப்பர் கோவில், காசிவிசுவநாதர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில்ஆகிய மூன்று கோவில்களிலும் குண்டு வைக்கவுள்ளோம். ஒரே நிேரத்தில் இவைவெடித்துச் சிதறும்.
இதை செயல்படுத்துதவற்காக ஆயிரம் பேர் நெல்லை ஜங்ஷன் பகுதியில்திரண்டுள்ளோம். இந்த செய்தியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 8ம் தேதிஎங்களது பணி தொடங்குகிறது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.காசியில் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய இந்த நேரத்தில்வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருப்பதால் அதை அலட்சியம் செய்யாதபோலீஸார் உடனடியாக 3 கோவில்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் வருகிற 17ம் தேதி கும்பாபிஷேகம்நடைபெறவுள்ளது. எனவே அக்கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. கோவில் நுழைவாசலில், மெட்டல் டிடெக்டர் கருவிகள்வைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் தீவிரமாகசோதனையிடப்படுகின்றன.
இதேபோல மாசி திருவிழா நடைபெற்று வரும் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும்பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலிலும் பாதுகாப்புஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிலுக்குள்ளும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications